பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 யெல்லா நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய வல்ல பிறவு மாஅங் கன்னவை தோன்றி னவற்ருெடுங் கொளலே. இஃது இருதிணைக்குமுரிய விரவுப்பெயர்கள் இவையெனத் தொகுத்துணர்த்துகின்றது. (இ-ள்) இயற்பெயர் முதலாக நீ என்பதீருக எடுத்தோதப் பட்டனவும் அவையல்லாத அத்தன்மைய பிறவும் அவ்விரு திணைப் பொருண்மையினும் விரிவித் தோன்றுமாயின் அவ் விருதினேக்குமுரிய விரவுப்பெயராகக் கொள்க. எ-று. இயற்பெயர்-சாத்தன், கொற்றன் என்ருற் போன்று பெயராக வழங்குதற்குரியனவாய்க் காரணமின்றிப் பொருளே பற்றிவரும் இடுகுறிப் பெயர். சிஇனப்பெயர் --பெருங்காலன், முடவன் என்ருற் போன்று சினையுடைமையாகிய காரணம்பற்றி முதற்பொருள்மேல் வழங்கும் பெயர். சினைமுதற்பெயர் சீத்தலேச்சாத்தன், கொடும்புற மருதி என்ருற்போன்று சினையொடு தொடர்ந்து வரும் முதற்பொருளின் பெயர். முறைப்பெயர்க்கிளவி-தந்தை, தாய் என்ருற் போன்று முறைபற்றி அம்முறையுடைய பொருள்மேல் வரும் பெயர். இங்கு முறை என்றது பிறப்பினுல் ஒருவரோடு ஒருவர்க்குள தாகிய இயைபிணை. தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்ற பெயர் ஐந்தும் தம்மை யுணர்த்தி நின்றன. பிறவும் என்றதல்ை, மக, குழவி போல்வன இருதிணைக்கு முரிய விரவுப் பெயராகக் கொள்ளப்படும். விரவுப் பெயராக இங்கு எண்ணப்பட்ட இவை ஒரு காரணத்தால் இருதிணைப்