பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 இவ்வாறு பொதுவகையான் எல்லாவிடத்தோடும் எல்லாப் பாற்கும் உரியவாதலெய்தினும் பின்னர் விலக்கப்படுவன ஒழித்து ஒழிந்த இடமும் பாலும் கொள்க. (உ.ம்) அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவைசெல்க எ-ம். உண்டு வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன, வந்தேன், வந்தேம் எ-ம். அவன் இல்லே, அவள் இல்லே, அவர் இல்லே, அஃது இல்லே, அவை இல்லை, யான் இல்லே, யாம் இல்லே, நீ இல்லே, நீயிர் இல்லே எ-ம். அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு, யான் வேறு, யாம் வேறு, நீ வேறு, நீயிர் வேறு எ-ம். அவன் உண்மன, அவள் உண்மன, அவர்உண்மன, அஃது உண்மன, அவை உண்மன, யான் உண்மன, யாம் உண்மன;. நீ உண்மன, நீயிர் உண்மன எ-ம். அவன் உண்ணும் உணவு, அவள் உண்ணும்.உணவு, அவர் உண்ணும் உணவு, அஃது உண்ணும் உணவு, அவை உண்ணும் உணவு, யான் உண்ணும் உணவு, யாம் உண்ணும் உணவு, நீ உண்ணும் உணவு, நீயிர் உண்ணும் உணவு. எ-ம். அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் எ-ம். அவன் உண்ட உணவு, அவள் உண்ட உணவு, அவர் உண்ட உணவு, அஃது உண்ட உணவு, அவை உண்ட உணவு, யான் உண்ட உணவு, யாம் உண்ட உணவு, நீ உண்ட உணவு, நீயிர் உண்ட உணவு எ-ம். வரும். தொல்காப்பியனர் குறித்த விரவு வினைக்குறிப்பாகிய வேறு இல்லை என்பவற்றுடன் உண்டு என்னும் வினேக் குறிப் பினேயும் சேர்த்து, 338. வேறில்லே யுண்டைம் பால் மூவிடத்தன. என இவை மூன்றும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாகச் சூத்திரஞ்செய்தார் நன்னூலார். இவற்றுள் உண்டு என்பது அஃறிணை யொருமைக்கேயுரியதாயினும் தம் காலத்தில் பொது வினையாக வழங்குதல் கண்ட பவணந்திமுனிவர் அத&ன ஈண்டுப் புதியன புகுதலாகக் கொண்டுரைத்தார். 17