பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 (உ-ம்) சாத்தனும் வந்தான் என்புழி உம்மை கொற்ற னும் வந்தான் என முன்னிகழ்ச்சியாகிய எச்சங்குறித்து நிற்ற லின் இறந்தது தழி இய எச்சவும்மை கொற்றனும் வந்தான்: என்புழி உம்மை சாத்தனும் வருவான் என எதிர்நிகழ்ச்சி யைக் குறித்து நிற்றலின் எதிரது தழி இய எச்சவும்மையாகும். 'குறவரும் மருளுங்குன்று’ என்புழி உம்மை குன்றத்து மயங்காது இயங்குதற்கண் குறவர் சிறந்தமை குறித்து நிற்றலின் சிறப் பும்மையாகும். 'ஒன்று இரப்பான்போல் இளிவந்துஞ் சொல்லும், உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் 22 (கலி-47) என்புழி உம்மை இன்னன் என்று துணியாநிலேமைக் கண் வருதலின் ஐயவும்மையாகும். 'சாத்தன் வருதற்கும் உரியன் என்புழி உம்மை வாராமைக்கும் உரியன் என்னும் எதிர்மறையை ஒழிபாகவுடைத்தாய் நிற்றலின் எதிர்மறை யும்மையாகும். தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் என்புழி உம்மை எஞ்சாப் பொருண்மைக்கண் வருதலின் முற்றுமையா கும். நிலனும் நீருந் தீயும் வளியும் ஆகாயமுமெனப் பூதம் ஐந்து என்புழி உம்மை எண்ணுதற்கண் வருதலின் எண்ணும் மையாகும். இருநிலம் அடிதோய்தலின் திருமகளும் அல்லள் அரமகளும் அல்லள் இவள் யாராகும்??? என்புழி உம்மை தெரிதற் பொருட்கண் வருதலின் தெரிநிலையும்மையாகும். திருமகளோ அரமகளோ என ஐயுருது ஆராய்தற்கண் வருதலின் இவ்வும்மை ஐயவும்மையின் வேரு த லறியலாம். நெடியனும் வலியனும் ஆயினன்? என்புழி உம்மை ஆக்கங்குறித்து நிற்றலின் ஆக்க வும்மையெனப்படும். உம்மையிடைச் சொற்பொருள்களாகிய இவற்றை, 424. எதிர்மறை சிறப்பைய மெச்சமுற் றளவை தெரிநிலே யாக்கமோ டும்மை யெட்டே. எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார். எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை ஆக்கம் என்னும் எட்டுப் பொருளையும் தரும் உம்மை யிடைச்சொல். என்பது இதன் பொருள். இதன்கண் எண்ணு தற் பொருண்மையினே அளவு எனக் குறித்தார் நன்னூலார் .