பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 மென்மை வன்மை திண்மை நொய்ம்மை இழுமெனல் சருச் சரை என்னும் எட்டு ஊறுகளும் உயிரில்லாத பொருளின் பண்புகளாம்?? என்பது இதன்பொருள் , மேற்குறித்த உயிர்ப் பொருட்கும் உயிரில் பொருட்கும் உரிய பொதுவான தொழிற்பண்புகள் இவையென உணர்த் துவது , 454. தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல் நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல் ஈதல் இன்ன அவ் விருபொருட் டொழிற்குணம். எனவரும் நன்னுாற் சூத்திரமாகும். தோன்றல் முதல் ஈதல் ஈருகவுள்ள ஒன்பதும் இவைபோல்வனபிறவும் மேற்கூறிய உயிர்ப்பொருட்கும் உயிரில் பொருட்கும் பொதுவாகவுரிய தொழிற் பண்புகளாம். என்பது இதன் பொருளாகும். நன்னூல் உரிச்சொல்லியலில் 2 முதல் 14 முடிய அமைந்த இச்சூத்திரங்கள் யாவும், உரிச்சொற்களால் உணர்த்தப்படும் * இசை குறிப்பு பண்பு எனத் தொல்காப்பியனுராற் குறிக்கப் பட்ட குணப்பண்பும் தொழிற்பண்பும் ஆகியவற்றை விரித்துக் கூறும் விளக்கங்களாகும். உகூஅ. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன. இஃது உரிச்சொற்களுள் இவ்வியலிற் கூறப்படுவன. இவையென வுணர்த்துகின்றது. (இ-ஸ்) வழக்கின்கண் எல்லாரானும் அறியப் பொருள் வெளிப்பட வழங்கும் உரிச்சொற்களை ஈண்டு எடுத்துக் கூறுதல் வேண்டா; எல்லாரானும் வெளிப்பட (ப்பொருள்) அறியப் படாத உரிச்சொல் மேலன பின்வரும் சூத்திரங்கள். எ-று. வழக்கினுள் எல்லாரானும் அறிந்து பயிலப்படும் உரிச் சொற்களை மீண்டும் எடுத்துரைத்தலாற் பயனின்மையின் அச் சொற்கள் இவ்வியலில் எடுத்துரைக்கப்படமாட்டா; பலராலும் 22