பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367 பின்னும் மொழியடுத்து வருதலும் என இடைச்சொற்கு ஒதிய விதி உரிச்சொற்குங் கூறினராயிற்று என்பர் நச்சிகுர்க்கினியர். கூகம். கூறிய கிளவிப் பொருணிலே யல்ல வேறுபிற தோன்றினு மவற்ருெடு கொளலே, இதுவும் அது. (இ-ள்) (உரிச்சொற்களின் முன்னும் பின்னும் வரும், சொற்களே நாடியவழி) முற்கூறிய உரிச்சொற்களின் பொருள் நிலைமையல்லாத வேறு பிறபொருள் தோன்றுமாயினும் முற் கூறப்பட்டவற்ருேடு அவற்றையுங் கொள்க. எ-று. (உ-ம்) கடி நாறும் பூந்துணர் என்றவழிக் கடி என்பது நாறும் என்ற சொல்லின் சார்பால் முற்கூறப்பட்ட பொருள் பயவாது நறுமணம் என்ற பொருள் தந்தது . மரம் புரை பட்டது” என்புழிப் புரைபட்டது என்பது உயர்வு பொருள் தராது பொந்துபட்டது என்ற பொருள் தந்தது. இவ்வாறே இங்குக் கூறிய உரிச்சொற்கள் கூறப்படாத வேறு பொருளும் தருதலே இடம்நோக்கி யுணர்ந்து கொள்க. கடகூக. பொருட்குப் பொருடெரியின் அது வரம்பின்றே. இது, பயிலாத சொற்களைப் பயின்ற சொற்களொடு சார்த்திப் பொருளுணர்த்துங்காற் படும் முறைமை யுணர்த்து கின்றது. (இ-ள்) ஒரு சொல்லே ஒரு சொல்லாற் பொருளுணர்த் திய வழி அப்பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது? எனப் பொருளுக்குப் பொருள் தெரிய வினவுமாயின் அவ் வினு, விடை கூறுதற்குரிய வரம்பின்றியோடும். ஆதலால் பொருட்குப் பொருள் தெரியற்க . எ-று. உறு, தவ, நனி என்பவற்றை மிகுதிப் பொருள என்ருர் ஆசிரியர். மிகுதியாவது யாது? என ஒருவன் வினவின், ஒன்றைவிடப் பெரியது என்னலாம். அதனக்கேட்டு அமை யாது, பெரிது எனப்படுவது யாது? என அவன் மீண்டும்