பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மெய்தெரி பொருண்மேல் அன்மையும் விளம்புப? என்றர். என விளக்குவர் சங்கர நமச்சிவாயர், வேறிடத்தான என வரும் தொல்காப்பியத் தொடர்க்கு ஐயத்திற்கு வேருய்த்துணி பொருளிடத்து? என இளம்பூரணர் கூறிய உரையின மெய் தெரி பொருள்மேல் எனப் பவணந்தி முனிவர் அவ்வாறே ஏற்றுப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். உசு. அடைசினே முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினேச்சொல். இதுவும் ஒரு சொல்லுதல் வன்மை யுணர்த்துகின்றது. (இ-ள்) அடை, சினே, முதல் எனப்பட்ட மூன்றும் முறை மயங்காமல் வழக்கைப் பொருந்தி நடப்பன வண்ணச் சினேச் சொல். எ-று. அடை என்பது ஒரு பொருளது குணம், சினே என்பது உறுப்பு. முதல் என்பது அவ்வுறுப்பினையுடை யழுதற்பொருள். வண்ணச் சி&னச் சொல்-வண்ணச் சொல்லொடு தொடர்ந்த சினச் சொல்லையுடைய முதற்சொல். வடிவு முதலாகிய பிற பண்புமுளவேனும் வண்ணப் பண்பினது வழக்குப் பயிற்சி நோக்கி வண்ணச் சி&னச் சொல் என்ருர் . (உ. ம்) பெருந்தலைச் சாத்தன், செங்கால்நாரை என வரும். தலைப்பெருஞ் சாத்தன்: கால்செந்நாரை என முறை மயங்கிவரின் மரபு வழுவாம். நடை-வழக்கு. வழக்கினுள் மயங்காது வருமெனவே செய்யுளுள் மயங்கி வரவும்பெறும் என் பதாம் . அடை சினை முதல், என வரூஉம் மூன்றும் என்னது, முறை என்றதன்ை இருகுணம் அடுக்கி முதலொடு வருதலும், இருகுணம் அடுக்கிச் சினையொடு வருதலும் கொள்க.

  • முதலொடு குணமிரண் டடுக்குதல் வழக்கியல்

சினையொ டடுக்கல் செய்யு ளாறே.’ என்பது புறச்சூத்திரம்.