பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கச 总部五

கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழிஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் நம்பியர் மூவரு மைம்பான் மருகரு முடன் சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற சில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமார் வியந்தனர் நயந்த விசும்பி ளிையன்றலை யுலகமு மறிந்ததா லதுவே.' இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் காண்க. ஒருவற்குப் பல் படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும்-அங்ானம் நல்லிசை எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற் கொன்ற வேந்தன் பல்படை புறங்கொடுத்தலின்' அவரைக் கோறல் புரிதல் அறனன்றென்று கருதாது அவன் வாளாற் றடிந்து கொன்று குவித்தற்கண்ணும்; -

வஞ்சத்தாற் கொன்ற வேந்தனைக் கொன்றமைபற்றித் தனக்குக் கெட்டோரையும் அடங்கக் கோறற்கு உரியானை நல்லிசை முன்னர்ப் பெற்றோனென்றார்." நூழிலாவது, கொன்று குவித்தல்.

'வள்ளை நீக்கி வயtன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழி லாட்டு'

(பத்துப்-மதுரைக், உஇடு-உடுன்) புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே-பொருத்தித் தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்தினை என்றவாறு.

(பாடம்) 1 கொண்முதல்: 2 புறக்கொடுத்தலின் ?

3 புரிதல் நன் றன்று: 4. தனக்குக் கெட்டோர்-தனக்குத் தோற்றவர். தோற்றவர்கள் தன்னாற் கொல்லப்படுதற்குரிய தவறுடையராயினும் தோற்றவர்களேக் கொல்

லுதல் நல்லிதையாகாது என்பார், 'நல்லிசை முன்னர்ப் பெற்றோன்? என்றார். எனவே அவ்விசை இப்பொழுது கெட்டொழிந்தது என்பது கருத்து.