பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கஎ ఏLల్ తీn

உதாரணம் :

“எம்பியை வீட்டுத லெம்மனைக்கா யான்படுதல் வெம்பகன்முன் யான்விளைப்ப னென்றெழுந்தான்

நம்பி புறவோரிற் பாணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தா னறவோன் மறமிருந்த வாறு.”

இப் பாரதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்ய முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க.

'இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர்.' (குறள்-படைச்-கூ)

இதுவும் அது.

ஒல்லாரிடவயிற் புல்லியபாங்கினும்’-பகைவராயினும் அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும்போல்வன வேண் டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்த லானும்:

உதாரணம் :

'இந்திரன் மைந்த னுயிர்வேட் டிசந்திரவி மைந்தனை வெல்வான் வாங்கொண்டான்-றந்த நா னேந்திலைவேன் மன்னனே யன்றி யிதற்கு வந்த வேந்தனும் பெற்றான் மிகை"

இப் பாரதத்துப் பகைவனாற் படுதலறிந்துந் தன் கவச குண்டலங் கொடுத்தமை கூறினமையிற் புல்லியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருணையாகலின் வாகையாயிற்று."

இத்துணையு மறத்திற்குக் கூறியன. பகட்டினானும் மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் - எருதும். எருமையுமாகிய பகட்டினானும் யானையுங்

குதிரையுமாகிய மாவினானுங் குற்றத்தினிங்குஞ் சிறப்பினால் அமைந்தோரது கூறுபாட்டானும்;

1. புல்லியபாங்கு ஆவது, அன்பினால் வேண்டுவன அளித்துக் கேளிரா யொழுகுந் தன்மை. -

2. துரியோதனனது உயிர்த்தோழனாகிய கன்னன் தன் கவசகுண்டலங் தளுை. இழந்தால் முடிவில் அருச்சுனனால் தான் இறந்துபட நேரும் என்பது தெரிந்திருந்தும் தன்னை இரந்து வேண்டிய இந்திரனிடம் தன் கவச் குண்டலங் ಹಣ್ಣಾನ್ತ ಹ கொடுத்த செய்தி பாரதத்துட் கூறப்பட்டதாகும். இஃது ஒல்லாரிட வயிற் புல்லியபாங்கு என்னும் வாகைத் துறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாயிற்று. -