பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் لي من سنة "

14. இடையில் வண்புகழ்க் கொடைமையானும்-இடையற வின்றி வள்ளிய புகழை வளர்க்கும் கொடையும்;

15. பிழைத்தோர்த் தாங்குங் காவலானும்-தவறிழைத்தோ ரைப் பொறுக்கும் ஏமமும்;

16. பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்-மெய்ப்பொருள் பற்றிய உள்ளப்பரிசும்:

17. அருளொடு புணர்ந்த அகற்சியானும்-யார்மாட்டும் விரிந்து பெருகும் அருளொடுகூடிய துறவும்;

குறிப்பு :- கடளாற்றும் முயற்சிக் கஞ்சித் தனக்கொழிவு தேடும் போலித் துறவை விலக்கி அருள் சுரந்து எல்லார் மாட்டும் பரந்து பயன்தரும் அகன்ற அன்பாற் பிறர்க்கென முயலும் மெய்த் துறவின் விறே ஈண்டு கூறக்கருதலின், வாளா அகற்சி என்னாது 'அருளொடு புணர்ந்த' என்றடையொடு தொடர்ந்து சுட்டப் பட்டது.

18. காமநீத்த பாலினா னும்-வெல்லற்கரிய காமத்தை வெறுத்து விலக்கு மருந்திறலும்;

குறிப்பு :- இது துறவன்று; இல்வாழ்ந்தும் காமம் கூடியும் உரனுள்ளமுடைய பெரியார் உண்மையால், வேண்டியவெல் லாம் ஒருங்குவிடும் பெருந்துறவின் வேறாய். இருநிலை வாழ்வினுமொரு தலை நிற்போரறமாகும். முற்றும் பற்று விடும் கருத்தை இதிற் புகுத்தின், மேற்குறித்த தீரத்துறக்கும் 'அகற்சி'யுளடங்கிக் கூறியது கூறுங் குற்றமாய் முடியும். ஆதலின், மேலது துறவும், இத்துறை துறவறம் கருதாது காமம் கடியும் இருநிலைக்கும்பொது வான உரனுள்ளப் பெருமையும் விளக்குதல் வெளிப்படை.

இவ்வொன்பதும் மேற்கூறியாங்கு அறவகை வாகைத் துறை களாகும்.)

என்றிரு பாற்பட்ட ஒன்பதிற்றுத்துறைத்தே-என வகைக்கு ஒன்பதாய் இருவகையிலெண்ணிய பதினெட்டுத் துறையுடையது வாகைத்திணை.

குறிப்பு :- பதினெட்டுத் துறைத்தே என்னாது, 'இருபாற் பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே' என்றார்; மேற்கூறியாங்கு முன் மறவகையிலொன்பதும் பின் அறவகையிலொன்பதுமாக வாகைத் தினை துறைகொள்ளும் எனற்கு. இனி, இத்திணைத் துறை பதி னெட்டும் தன்மையால் இருவேறு வகைப்படுதலின் அவற்றை ஒரு