பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா க.அ 2一岳_莎

'அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும்-வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. (நாலடி. செல்வம். க) யாக்கை நிலையாமையாவது முன்னர்க் காட்டுதும்.

அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், “ஏறிய மடம் றிறம்” (அகத்திணை இச) முதலாகிய நோந்திறக் காமப் பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறு போல இது புறத்திணை ஐந்தற்கும் புறனாகலானும் இதுபோல அதுவும் நிலையாமை நோந்திறம் பற்றியும் வருதலானும் அதற்கு இது புறனாயிற்று." நச் :

یانگ : காஞ்சி தானே பெருந்திணைப் புறனே.

இத்துணையும் உரிப்பொருள்பெற்ற அகத்திணைக்குப் புறங் கூறி, இஃது உரிப்பொருளில்லாத பெருந்திணைக்குப் புறணிது வென்கின்றது. இதனை வாகைக்குப் பின்வைத்தார், வீரக் குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு "

(இ-ள்) காஞ்சிதானே பெருந்தினைப் புறனே-எழுதிணை யுட் காஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந் திணைக்குப் புறனாம் என்றவாறு.

அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், எண்வகை மணத்தினும் நான்குமணம்பெற்ற பெருந்திணைபோல இக் காஞ்சி யும் அற முதலாகிய மும்முதற்பொருளும் அவற்றது நிலை

1. ஏறிய மடற்றிறம், இளமை தீர்திறம், தேறுதலொழிந்த காமத்து மிகு திறம், மிக்க காமத் துமிடல் என மேல் அகத்திணையியலிற் கூறப்பட்ட பெருந் திணையாகிய துன்பியற்பகுதி அகத்தினை ஐந்திற்கும் புறன் ஆயினவாறுபோல, நிலையாமைப்பகுதியாகிய இக்காஞ்சியும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகையாகிய புறத்திணை ஐந்திற்கும் புறனாகலானும், இக்காஞ்சித்திணை போல அப்பெருந்திணையும் நிலையாமையாகிய துன்பியல்பற்றி வருதலானும் காஞ்சி யென் னும் இது பெருந்திணை யென்னும் அகத்திணைக்குப் புறனாயிற்று என்ப தாம். நோந்திறம்-துன்புறும் பகுதி.

2. கைக்கிளை முதலாப் பெருந்திணையிறு வாய் உள்ள அகத்திணை ஏழினுள் நடுவண் உள்ள திணைகள் ஐந்தும் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள்கள் உடையன எனவும் அவற்றின் முன்னும் பின் னும் வைத்தெண் ணப்பட்ட கைக்கிளையும் பெருந்தினையும் உரிப்பொருள் அல்லாதன என வும் ஆசிரியர் கூறுதலின் உரிப்பொருள் அல்லாத பெருந்திணை' என்றார் நச்சினார்க்கி னியர்.

3. வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்பொடு தொடர்புடையதென்பது போர்க்களத்திற் சாவுக்கு அஞ்சாது போர்புரியும் வீரர்களை முதற்குலோத் துங்கன் மெய்க்கீர்த்தியில் 'சாவேறெல்லாம் தனிவிசும்பேற’ எனச் சா ஏறு:

எனக் குறித்த குறிப்பினால் இனிது புலனாகும்.