பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

έ-fä- εξί தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்’-அறிவான் மிக்கோர் அல்லாதார்க்குச் சொன்ன முதுகாஞ்சியும்.

பண்பு உறவரூஉம் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறனும்’-இயல்புற வரும் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறக்காஞ்சியும்.

ஏமச்சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய் ஒம்பிய பேஎய்ப் பக்கமும்’-ஒம்பும் சுற்றம் இன்மையாற் புண்ணோனைப் பேய் ஒம்பிய பேய்ப் பக்கமும்,

இன்னன் என்று இரங்கிய மன்னையும்’-இத்தன்மையான் என உலகத்தார் இரங்கிய மன்னைக் காஞ்சியும்.

இன்னது பிழைப்பின் இது ஆகியர்" என துன் அருஞ் சிறப்பின் வஞ்சினமும்-இன்னவாறு செய்தலைப் பிழைத்தேனாயின் இன்

குரியதோர் காரணப்பெயர் கூற்றம் சாற்றிய பெருமையாவது, ஒருவர்க்கு ஊழால் வரையறுக்கப்பட்ட வாழ் நாள் முடிந்த எல்லையில் கூற்றம் வரும் எனப் பெரியோரால் அறிவுறுத்தப்படும் பெருவகாஞ்சி யென்னும் துறையாகும். பெருமை - பெருங்காஞ்சி.

நெரு நல் உளனொருவன் இன்றில்லையென்னும் பெருமையுடைத் திவ் அலகு (க.கசு) என வரும் திருக்குறளில் பெருமை என்று சுட்டப்பட்டது இப்புறத்துறையே யாகும்.

1. கழிந்தோர்-அறிவால் மிகுந்தோர்; ஈண்டுக்கழிதல் என்றது, அறியாமை யின் நீங்கி மேன்மேல் உயர்தல் என்னும் பொருளில் ஆளப்பெற்றது என்பது இளம்பூரணர் கருத்தாகும். உரைக்குங்கழிந்திங்குனர் வரியோன் (திருக்கிே. வையார்........... எனச் சான்றோர் இப்பொருளில் இச் சொல்லை ஆளுதல் ஈண்டு ஒப்பு நோக்கத் ககுவதாகும்.

ஒழிந்கோர்-அல்லாதார். காட்டிய-எடுத்துக்காட்டுடன் அறிவுறுத்திய, முதுமை-முதுகாஞ்சி.

2. புண்பு உறவரும் பகுதியாவது, வீரப்பண்பினை மேலும் பொருந்த இனி மேல் தான் எய்து தற்கு மேற்கொள்ளும் கூறுபாடு.

3. ஏமச் சுற்றம்-புண்பட்டு வீழ்ந்த வீரனைப் பாதுகாத்தற்குரிய, நெருங்கிய சுற்றத்தார்,

‘இன்றி என்னும் வினையெச்சம் இல்லமையால் என ஏதுப் பொருளில் வந்தது.

புண்ணோனைப் பேய்ஓம்பிய பக்கம் என இரண்டாமுருபு விரித்துரைக்க. 4. இன்னன் என்று இரங்கு தலாவது இன்ன இன்ன உயர்ந்த தன்மைகளை யுடையவன் இவன்’ என்று அவனுடைய உயர்ந்த பண்புகளையெல்லாம் முறையே எடுத்துக்கூறி, அத்தன்மையனாகிய தலைமகனை இழந்தோமே என வருத்த முற்று இரங்குதல். இவ்வாறு கழிந்ததற்கிரங்குதலாகிய கையறு நிலைச் செய்யுளின் கண் கழிந்தது என்ற பொருளில் மன்: என்னும் இடைச் சொற் பயின்று வருதல் பெரும்பான்மையாதலின் இது மன் னைக் காஞ்சியென்னும் பெயர்த்தாயிற்று. மன் என்னும் இடைச்சொல் மன்னை என ஈறுதிரிந்தது.

5 பிழைத்தல்-செய்யாது தவறுதல்.

இதுவாகியன் (இத்தன்மையன் ஆகக்கடவேன்) என்பது இளம்பூரணர் கொண்ட பாடம், இதுவாகியர்' என்பது நச்சினார்க் கினியர் கொண்ட பாடம்,