பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


恕。总窟空_ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

3. இன்னும், இயற்கை வகைப் பிறவித்தேவரன்றியும், பராவு வெறியான் மக்கள் தாமே விகாரவகையான்' அமர ராக்கிச் செய்யும் வாழ்த்துப்பெறும் செயற்கைப் பொய்த்தேவப் போலிகள் நச்சினார்க்கினியர் கூறுமாறு ஆறே என்னும் எண்ணில் அமைவனவன்றே. புள், விலங்கு, ஊர்வன, யாறு, மலை, மரம், செடி, கொடியாகிய பொருள்களில் வாழ்த்துக் கடியப்படுவ தொன்றேனுமுண்டோ? பாம்பு, எலி, பருந்து, மயில், மாடு, ஆல், வேல், அரசு அனைத்தையும் நாளும் நம்மவர் வணங்கக் காண் கிறோம். இது நல்ல வழிபாடெனவே கருதப்படுகிறது. கீதையும் வேதமும் எப்பொருளுந் தெய்வமாகும், எதன் வணக்கமும் தெய்வத்தின்பாற்சென்று முடியும்’ என விளக்கியிருக்க, பசு பார்ப்பாராதி ஆறு மட்டுமே வழுத்தற்குரியன வென்பது பொருந்தாதன்றே.

4. இனி, வேதம் தமிழர் படிக்கொணாதாகவே, வேதமுடி வென உரைகாரர் கூறுவவெல்லாம் சரியயெனத் தமிழ் கற்பார் கொள்ளவும், கொண்டுவாளா அமையவும் கடவரென நச்சினார்க் கினியர் கருதினர் போலும்! அவர் இங்குக் கூறிய அறுவகையினவே தேவர்க்காம் வணக்கம் பெறற்குரிய வென்று எந்த வேதம் எப் பகுதியிற் கூறியுள்ளது? இதற்குத் தெளிவான வேதவாசகங் காட்டும்வரை இதுவே வேதமுடிவென்பது துணியப்படாததாகும். “அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவின் (112) என்னும் புறப் பாடல் பாரியின் யாக்கை நிலையாமையும் செல்வநிலையாமையுங் கூறுதலிற் காஞ்சியாய்ப் பாரி புகழ் குறித்தமையாற் பாடாணு மாயிற்று.

'நோகோ யானே, தேய்கமா காலை, பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்? உலகுபுகத் திறந்த வாயிற் பலரோ டுண்டல் டிரீஇ யானே.. -புறம். உகடச

என்னும், இவ்வெள்ளெருக்கிலையார் புறப்பாட்டில் வேள் எவ்வியின் கொடைவென்றி வேளாண்மையும் அவனிறந்தற்கிரங் *அமுடன் கூறலால், இது காஞ்சிப் பாடாணாயிற்று.