பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ః தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

இதனானே யாண்டு இத்துணைச் சென்றதென்று எழுதும் நாண்மங்கலமும் பெறுதும்."

நடைமிகுத்து ஏத்திய குடைநிழன் மர்பும்-உலகவொழுக் கத்தை இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக் கணமும்;

இங்ங்ணம் புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந் நிழல் உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக் குடிபுறங்காத்தற்குக் குறியாகக் குடைகொண்டேனென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின்.

மரபென்றதனாற் செங்கோலுந் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க."

உதாரணம் :

'மத்தரங் காம்பா மணிவிகம் போலையாத் திங்க ளதற்கோர் திலதமா-வெங்கணு

முற்று நீர் வைய முழுது நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை'

(முத்த்ொள்ளாயிரம்-க உ)

என வரும்.

"அறதீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப் புற நீர்போன் முற்றும் பொதியும்-பிறரொவ்வா மூவேந்த ருள்ளு முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டன் குடை’’

எனவும்,

1. தமிழகக் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் நா.ாள் வேந்தர் முடி ஆனந்த நாளை முதலாகக் கொண்டு இத்தனையாண்டு என்று யாண்டும் திங்களும் நாளும்தொடங்கி ஆண்டுதோறும் தொடர்ந்து எழுதப்பெறுதல், சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம் என்னும் இத்துறையின்பாற்படும் என்பதாம்.

2. சிலப்பதிகாரக் காப்பியத்தின் முதற்கண்ணதாகிய மங்கல வாழ்த்துப் பாடலில் அமைந்த திங்களைப் போற்றுதும்’, ஞாயிறு போற்றுதும் மர்மழை ஐ, ஆம் பூம்புகார் போற்று தும் என வரும் பாடற் பகுதியின் உரையில் 4:இத்திங்கள் முதலியவற்று இவனளித்தல் முதலிய செய்கை ஒத்த லான் இவையும் இவ்னாற் சிறந்தன என்பதாம். இறப்பப் புனைந்துரைத்தற்கு க், குடைநிழல் iரபு என்ற தனால் கொடை புத் திகிரியும் உயர்ச்சியும் பனைந்து கூறியவிா,ா விற்து’ என அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம் இங்கு ஒப்புநோக்கியுணர்த் தகுவதாகும்.