பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பா க శ్రీ ...

இவற்றுள் ஆண்பால் பற்றி வந்ததனை இல்லாண்முல்லை யெனவும், பெண்பால் பற்றி வந்ததனை மூதின்முல்லையெனவும் கூறுப."

"கொற்றவை நிலை என்றதனானே, குறிஞ்சித் திணைக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்"

தச் : இவையும் வெட்சித்திணையா மென்கின்றது.

(இ-ன்) மறங்கடைக் கூட்டிய துடிநிலை-போர்க்களத்து மறவரது மறத்தினைக் கடைக்கூட்டிய துடிநிலையும், சிறந்த கொற்றவை நிலையும்-அத் தொழிற்குச் சிறந்த கொற்றவைக் குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும்: அகத்திணைப்புறனே-அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாம் என்றவாறு.

"நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் தி லதமு மொத்தலங்க மெய்பூசி யோர்ந்துடி இத்-தத்தந் துடி யசோ ர்ேப்புறஞ் சூழ்ந்தகர் மறவர் குடி நி ைபாராட்டக் கொண்டு.” இஃது இருவகை வெட்சிக்கும் பொது; நிரைகொண்டோர்க் கும் மீட்டோர்க்குந் துடிகொட்டிச் சேறலொத்தலின்.

'அருமைத் தலைத்தரு ’மாணிரையு னையை யெருமைப் பலிகேசர் எளியைந்தா-ளசனும் வேந்தன்மேற் செல்வான் விறல் வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் றோம லின்று'. இதனானே வருகின்ற வஞ்சித்திணைக்குங் கொற்றவை நிலை காரணமாயிற்று; தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென் றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவ ராதலின்.

இனிக் கொற்றவை நிலைப் பகுதியுட் சில வருமாறு:

2. ஆண்பால் புற்றிவந்ததனை வல்லாண்முல்லையெனவும், பெண்பால் பற்றிவந்ததனை மூதின்முல்லையெனவும் கூறு: ' என இவ் அரைத்தொடர் அழைதல் வேண்டும். இங்கனம் கூறுபவர் ஐயனாரிதனார். புறப்பொருள் வெண்பா மாலை வாகைப் படலத்தில் (23) வல்லாண்முல்லை என் னுந்துறையும் (21) மூதின் முல்லை யென்னுந்துறையும் இடம் பெற்றுள்ளமை இங்கு உணரத் தகுவதாகும.

3. வெற்றிவெல்போர்க்கொற்றவை சிறுவ? (முருகு-258) என்பது திருமுருகாற்றுப்படிை, * - - ... . . . -