பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ாக தொல்காப்பியம் - பொருளதிகாரம்

காதலர் ஒருவருள் ஒருவர் ஒருவரைப் புகழ்தல் என்பது இனையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்றவாறு இருவரிடையே வேறுபாட்டுணர்வினைத் தோற்றுவிக்குமோ என ஐயுறுதற் கிடனின்றிக் கற்புக் காலத்தே கணவன் மனைவியின் பாற கொண்ட வேட்கை மிகுதியினால் அவளுடைய எழில்நலங்களைப்பாராட்டிய்புகழும் இவ்வுரை அவர் தம் மனைமாட்சியினை மென்மேலும் வளம்பெறச் செய்வதாக வின் இத்தகைய புகழ்ச்சியுரையினை அறிஞர்கள் விலக்காது உடன்படுவர் என்பார் கற்பினுள் புகழ்தகை வரையார்’ என்றார் ஆசிரியர். கோவலன் கண்ணகியை மணந்து மகிழும் கற்புக் காலத்தே மாசறு பொன்னே வலம் புரிமுத்தே, காசறு விரையே கரும்பே தேனே' என்றாங்குத் தன் மனைவியின் நலம் பாராட்டிய பகுதி இதன்பாற்படும்.

உஉடு. இறைச்சி தானே உரிப்புறத் ததுவே.

இளம்பூரணம் :

என்-எனின். இறைச்சிப்பொருளாமா றுணர்த்திற்று.

இ-ள்.) இறைச்சிப் பொருளென்பது உரிப்பொருளின்( * مت...ألا புறத்தாகித் தோன்றும் பொருள் என்றவாறு."

. அஃதாவது கருப்பொருளாகிய நாட்டிற்கும் ஊர்க்குந் துறைக்கும் அடையாகி வருவது.”

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.' (குறுந். க.)

என்றவழி நாட்டிற்கு அடையாகி வந்த குறிஞ்சிப்பூவுந்

. . 1. இறைச்சிதானே பொருட்புறத்ததுவே எனப்பாடம்கொண்டார் கச்சி. னார்க்கினியர், இறைச்சி என்றது, வெளிப்படக் கூறப்படும் உரிப் பொருளின் புறத்தே தங்கியிருக்கும் குறிப்புப்பொருளே. -

3.

- காட்டிற்கும் ஊர்க்கும் நீர்த்துறைக்கும் அடைமொழிகளாய் வரும் கருப் பொருள் நிகழ்ச்சிகளே இறைச்சியெனப்படும் என்பதாம்.