பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-நூற்பாக நி

வகைய என்கின்றது."

(இ - ள், இசை திரிந்து இசைப்பினும்-சொற்கள் தத்த ம் பொருளுணர்த்தாது வேறுபட்டிசைப்பினும் : அசை திரிந்து இயலா இசைப்பினும் - இவ்வதிகாரத்துள் யாத்த பொருள்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்குமாகிய புலனெறி வழக்கிற் றிரிந்து இயன்றிசைப்பினும் மன் பொருள் இயையும் என்மனா புலவர்-அவை மிகவும் பொருளேயாய்ப் பொருந்து மென்று தொல்லாசிரியர் கூறுவர் (எ - று) அதனால் யானும் அவ்வாறு கூறுவலென்றார்.”

சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறி வுறுக்கும் ஒசையாதலின் அதனை இசையென்றார் , இஃது ஆகு பெயர். அசைக்கப்பட்டது அசையென்பதும் ஆகுபெயர். நோயு மின்பமும் (தொல். பொ. 196) என்பதனுள் இருபெயர் மூன்று முரிய வாக' என்பதனால் திணை மயங்குமென்றும், உண்டற் குரிய வல்லாப் பொருளை (தொல். பொ. 313) என்றும் பிறாண் டுஞ் சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்துதலும், இறைச்சிப் பொருண் முதலியன நாடக வழக்கின் வழி இயவாறுந், தேரும் யானையும்' (தொல். பொ. 212) அறக்கழிவுடையன (தொல். பொ. 218) "தாயத்தி னடையா' (தொல். பொ. 221) என்னுஞ்

1. பொருளியலுட் கூறப்படும் விதிகள் யாவும் சொற்பொருளின் வழுவமைதி யும் பொருளின் வழுவமைதியும் என இருதிறப்படும் என உணர்த்துதல் இம்முதற் சூத்திரத்தின் கருத்தென்பர் கச்சினார்க்கினியர். ஆயின் இக்கருத்தினை விளக்கு தற்குரிய வகையில் இச்சூத்திரத்தின் சொற்கிடக்கை அமையவில்லையிென்பது இங்கு கினைக்கத்தக்கதாகும்.

2. இச் சூத்திரத்தின் தொடர் மொழியமைப்பினைக் கருத்திற் கொள்ளாது "இசை திரிக் து இசைப்பினும் அசைதிரிக் து இயலா இசைப்பினும் மன் பொருள் இயையும்’ என த்தாம் விரும்பியவாறே சொற்களை முன்னும் பின்னும் கூட்டி கச்சி னார்க்கினியர் வரைந்துள்ள இவ்வுரை ஆசிரியர் கருத்துக்கும் சூத்திர ச் சொற்

கிடக்கைக்கும் சிறிதும் பொருந்துவதாக அமையவில்லை.

3. இசை-ஓசை; ஈண்டு ஓசையினையுடைய சொல்லுக்கு ஆயினமையின் ஆகுபெயர் என்றார். இது பண்பாகு பெயர். "அசை என்பதற்கு 'யாத்த பொருள் கள்' எனப்பொருள் கொண்டமையின் அசைக்கப்பட்டது அசை என்பதும் ஆகு பெயர் என்றார். அசைத்தல்-கட்டுதல், கட்டப்பட்ட பொருள்கட்கு ஆயினமை யின் இது தொழிலாகுபெயர் எனப்படும். "அசைதிரிந்தியலா எனப்பாடங்கொண் டார் கச் சினார்க்கினியர்,