பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


వీ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

அவரவருறுபிணி தமபோற் போற்றியும் என்பது- யாவர் சிலர் யாதொரு பிணியுற்றார் அவருற்ற பிணியைத் தாமுற்ற பிணி போலச் சேர்த்தியும் என்றவாறு. '

"அவரவர்' என்பது உயர் திணையாய்க் கூறினும் இருதினை யுங் கொள்ளப்படும்.

ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப' (பொருளியல். உ.எ) என்பதனால்,

அறிவும் புலனும் வேறபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியலாக வுவமவ்ாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து என்பது -அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி இருவகைப்பட்ட பெயரும் மூவகைப்பட்ட பொருட்கும் உரித் தாக உவமம் பொருந்து மிடத்து உவமவாயிற் படுத்தலும் என்ற வாது.

வேறுபட நிறுத்தலாவது-தத்தம் நிலைமை யொழிய வென்றவாறு இருபெயராவது-உவமைப்பெயரும் உவமிக்கும் பெயரும். மூன்றும் உரியவாகும் என்பது-தொழிலும் பண்பும் சய

னும். உவமம் ஒன்றிடத்து’ என்றதனை மொழி மாற்றுக

இருவர்க்கும் உரிய பாற் கிளவி என்பது-தலைமகற்குந் தலைமகட்கும் உரிய வொரு கூற்றுக் கிளவி என்றவாறு,

1. அவரவருறுபிணிதமபோற் சேர்த்தியும் என்பதே இளம் பூரணர் கொண்ட பாடம். "அவரவர்” என உயர்திணையாற் கூறினும் அவையவை என அஃறிணை பும் கொள்ளப்படும் என்பதாம்.

2. உவமைக்கும் பொருளுக்கு மிடையேயமைக்த பொதுத் தன்மைகளை வினை பயன் மெய் உரு என உவமவியலில் கான் காகப் பகுத் துரை க்கும் தொல்

காப்பியர் இங்கு அவற்றை *மூன்று எனக் குறித்தார் என்றல் பொருந்தாது.

.ே உவமம் ஒன்றிடத்து உவமவாயிற்படுத்தலும் என இயைத் துப்பொருள் வரைவப்பெற்றது. –.

4. உணர்ச்சி வசப்பட்டு உள்ளக்கலக்கமுற்ற ஒரு திறத்தார் க்கே புரிய தாய்ப் பயின்று வரும் கூற்றுவகை பற்கிளவி எனப்படும். பால்-பக்கம். கிளவி.

சொல்வகை,