பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூற்பா கக கதி

உம்மையாற் பிற தொழில்பற்றி வருவனவுங் கொள்க.

'கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்

தின்னும் அவர்க்கான லுற்று" (குறள். 12:44) "புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் - அள்ளிக்கொள் வற்றே பசப்பு' (குறள் , 1187) ' வருத்தின் வான் றோய் வற்றே காமம்" (குறுந் , 102}

என்றாற்போல்வனவுங் கொள்க. (க.க)

ஆய்வுரை : இஃது அகத்தினை மக்கள் கூற்றுக்களில் இடம் பெறும் ஒரு சார் சொற்பொருள் வழுவமைக்கின்றது.

(இாள்) உண்ணுதற்றொழிலை நிகழ்த்துதற்குரியன அல் லாத உணர்வற்ற பொருள்களை உண்ணுதற்றொழிவை நிகழ்த் தின வாக ஏறிட்டுக்கூறுதலும் இவ்வகத் திணைக்கண் வழங்கும் மரபாகும். எ-று.

உண்ணுதற்றொழிலுக்கு உரியவல்லாத பொருள் என்றது, உண்ணுதற்றொழிலை நிகழ்த்தும் அறிவும் செயலும் வாய்க்கப் பெறாத அறிவில் பொருள்களை உண்டனபோலக் கூறுதலாவது, அவை அத் தொழிலை நிகழ்த்தினவாக அத் தொழிற்கு வினை முதலாந்தன்மையை அவற்றின் மேல் ஏறிட்டுக் கூறுதல்.

பசலையால் உணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்’ (கலித். யரு) என்புழிப் பசலை என்பது உணர்வில்லாத பொருள். அது தலைவியின் எழில் நலத்தை உண்ணுதலாகிய தொழிலை நிகழ்த்தியதாகக் கூறினமை காண்க. தின்னுதல் முதவியவற்றிற் கும் இஃது ஒக்கும். இனி, இந்நூற்பாவுக்கு 'உண்ணப்படுதற் குரியவல்லாத பொருளை உண்ணப்பட்டதுபோலக் கூறலும் மரபாம்” என வேறும் ஒரு பொருள் வரைந்து, தோள் நலம் உண்டு துர கப்பட்டோர்’ (கலித். உங்) என எடுத்துக்காட்டுத்தந்து நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளமையும் ஏற்புடையதேயாகும்.

உகக. பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே

காப்புக்கைம் மிகுதல் உண்மை யான

                  • mismimo prome-rm. -

1. "பொருளென மொழிதலும் வரைநிலையின்றே

காப்புக் கைம் மிகுதல் உண்மையான

என்ற அளவிலேயே இவ்வியலின் இக ஆம் சூத்திரம் கிறைவுகின்றது.