பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


జి. தொல்காப்பியம்- பொருளதிகாரம்

சுரம்-நடத்தற்கியலாத வெம்மையுடைய வழி . மொழிதல் என்றது, மொழிந்து விலக்குதல் என்ற கருத்தில் இங்கு ஆளப்பெற்றது.

உகா. உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்

வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே. இளம் பூரணம்:

என்-எனின். இதுவுமோர் மரபு உணர்த்திற்று.

(இ-ள்) உயந்தோர் கூற்று வழக்குவழிப்படுதலின் வழக்குப் படுதல் செய்யுட்குக் கடன் என்றவாறு.

எனவே, வழக்கழியவருவன செய்யுட்கண் வரப்பெறா என்ற வாறு. இதனானே மேலதிகாரத்தில் கூறிய சொல்லும் இவ் வதி காரத்திற் கூறு தற்கியன்ற பொருளும் வழக்கொடு புணர்ந்தனவே செய்யுட்கண் வருவன; புணராதன செய்யுட்கண் வரப்பெறா என் றவாறாம். இன்னும் இந் நூலகத்து அகப்பொருளாகவும் புறப் பொருளாகவும் எடுத்தோதப் பட்டதன்றி உயர்ந்தோர் வழக்கொடு பொருந்தி வருவன வெல்லாஞ் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்க என வெஞ்சியதுணர்த்தியவாறுமாம். உயர்ந்தோர் வழக்கென்ற மையானும், பொருளுமின்பமும் கெடாமல் மூன்றினுளொன்று பயப்பக் கூறுதல் கொள்க." {ല്ല)

நச்சினார்க்கினியம் :

இது. முன்னர் உலகியல் வழக்கென்றது செய்யுட்காமென்று அமைக்கின்றது.

1. “வழக்கெனப்படுவதுயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சியவர் கட்டாகலான (மரபியல், 92)

என வரும் மரபியற் சூத்திரம், 'வழக்கென்று சொல்லப்பட்ட து உயர்க்தோர் வழக் கினை எனவும் இழிந்தோர் வழக்கு வழககெனப்படாது எனவும் கூறியது, இச் சூத்திரம் வழக்கழி வருவன செய்யுட் கண் வரப்பெறா என்பது உணர்த்தியது: என இவ்விரு நூற்ப க்களுக்கிடையே யமைக்த பொருள் அமைப்பினைப் பகுத் துணர்தல் இன்றியமையாததாகும். -

2. இந்நூலகத்து......எஞ்சிய துணர்த்தியவாறுமாம்" என்பது, இச்சூத்திரத் திற்கு இளம்பூரணர் வரைந்த இரண்டாவது உரையாகும்.

3. "உயர்ந்தோர் வழக்கென் றமையா ன் பொருளுமின்பமும் அறமுங்கெடாமல் ஆ ன்றினுள் ஒன்று பயப்பக்கூறுதல் கொள்க’ என இவ்வுரைப்பகுதியினைத் திருத்திப்பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.