பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் - நூற்பா உடு அத எல்லா, இஃதொத்த னென்பெறான் கேட்டைக்கான்' (கலி.சு.க)

என்றவழிப் பெண்பால்மேல் வந்தது.

1. எல்லா, தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா

செய்வது நன்றாமோ மற்று ’’ (கலி,சுஉ)

என்றவழித் தலைமகன்மேல் வந்தது.

இதுவும் ஒரு சொல்வழு அமைத்தவாறு. இச் சொற் காமப் பொருளாகத் தோற்றுதலாற் சொல்லதிகாரத்து ஒதாது ஈண்டு ஒதப்பட்டது. (ു@)

நச்சினார்க்கினியம் :

இது, கிழவன் கிழத்தி பாங்கன் பாங்கியென்னும் முறைப் பெயராகிய சொற்பற்றிப் பிறந்ததோர் வழுவமைக்கின்றது:

(இ - ள்.) முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச் சொல் முறைப்பெயரிடத்து இருபாற்கும் பொருந்தின தகுதியை யுடைய எல்லா வென்னுஞ் சொல்; நிலைக்கு உரிமரபின் இருவிற் றும் உரித்தே - புலனெறிவழக்கிற்குரிய முறைமையினானே வழு வாகாது ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும் (எ -று.)

"கெழு தகை யென்றதனானே தலைவியுந் தோழியுந் தலை வனைக் கூறியதே பெரும்பான்மையென்றுந் தலைவன் தலைவியை யும் பாங்சனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவ மைதியென்றுங் கொள்க.

உ-ம்: அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல் - முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி

உதிர்துகள் உக்கநின் ஆடையொலிப்ப எதிர்வளி நின்றாய் நீ செல்: இனி யெல்லா’’ (கலி. 81)

1. கெழுதகைமையாவது கண்பாகப்பழகிய உரிமைத் தன்மை. இத்தகைய கட்புரிமை புலப்படும்படி கட்டாரை அழைக்கும் சொல் கெழுதகைச் சொல் லாகும். ஆண்பெண் இருபாலார்க்கும் உரிய கிலையிற் பொதுவாய் வழ்ங்கப் با தஜின் கெழுத்தைப் பொதுச்சொல் எனப்பட்டது. இங்ஙனம் இருபாலார்க்கும் பொது வர்க வழங்கும் கெழுதகைப்பொதுச்சொல் 'எல்லா என்னுஞ்சொல்லாம் என்ப்து

சங்க இலக்கிய ஆட்சியால் கன்கு புலனாகும்.