பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா கன கி.க.இ.

பேராசிரியம் இஃது ஐந்தாங்காலத்து மெய்ப்பாடுணர்த்துகின்றது. (இ-ள் மேற்கூறிய கொடுப்பவை கோடல் நிகழ்ந்த வழி அவ்வொழுகலாறு புறத்தார்க்கெல்லாம் ஐயமாகலின் அதன்வழித் தோன்றுவது தெரிந்துடம்படுதலென் றாரென்பது, தெரிந்துடம்படுதல் - தலைமகனைத் தலைமகள் இவ்வொ ழுசலாறு நிகழ்த்தவாற்றைப் பட்டாங்குணராதார் தலைமை செய்தன ளிவளெனவுந் தகாத ஒழுக்கின எளிெைளனவும் பல்லாத் றானும் இவள் கண்ணே ஏதமிட்டுத் துணிந்தும் துணியாதும் உரைப்பாராகலான், அதற்கு நாணி இனி யாதுகொல்லோ செயற்பாலதென்று ஆராய்ந்து, இவ்வொழுகலாற்றினை அறிவிப் பேங்கொல் அறிவியேங்கொலெனத் தடுமாறிப் பின்னொரு வன கயான் ஆராய்ந்து, முழுவது உஞ் சொல்லாது தன் குலத் திற்கும ஒழுக்கத்திற்கும் பெண்டன்மைக்கும் ஏற்றவகையான் வேண்டுவன தெரிந்துகொண்டு இன்னவாறு பட்டதென்று தோழிக்கு உடம்படுதலுந் தோழியாற் செவிலிக்கு உடம்படு தலுமென இன்னோரன்ன குறிப்பினைத் தெரிந்து உடன்படு தலும்:

தினைப்புவினை மறுத்தல்-அங்ங்னந் தமர்க்குத் தானுடம் பட்டதன்பின்னர்த் தலைமகனொடு பகலுமிரவும் பண்டு திளைத்தவாறு திளைத்தலை அச்சமு நானு மடனுங் காரண மாக மறுத்தலும்;

உடம்பாட்டின் பின்னர் மறுக்குமாதலின் அதனைத் திளைப்பு வினை மறுத்தலென்று இரண்டாவது வைத்தா னென்பது.

கரந்திடத்தொழிதல் - அக்காலத்து இற்செறிக்கப்படுதலால் தான் அவனை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவற்கு வெளிப்படாதொழுகுதலை உடை யளாதலும்:

1. தலைமகனொடு தலைமகளிடை இவ்வொழுகலாது கிகழ்ந்தவாற்தை என இத்தொடர் அயைதல் பொருட்பொருத்தமுடையதாகும். பட்டங்கு-உள்ளபடி தலைமை செய்தல் - பெற்றோர்க்கு அடங்காது தான் விரும்பியவண்ணம் கடத்தல். தகாத ஒழுக்கு - கானுடைமைக்கு ஏலாத ஒழுக்கம் ஏதம் இட்டு - குற்றத்தினை யேற்றி,

2. விளையாட்டாயத்துடன் புறத்தே செல்லுதலையொழிக் து தலைவி தனக்குரிய இடத்திலேயே அடங்கித் தங்குதலை இடத்தொழில்’ என்றார்.