பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உச உல்தி

தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாதுமக்கு அரியே மாகிய காலைப் பெரிய நோன்றணிர் நோகோ யானே' (குறுந்- 178)

என்பதனுள் தொழுது காண்பிறையில் தோன்றின மென்பது களவுக்காலத்து இடையீடு பெருகிற்றெனக் கூறி அங்ஙனம் வரைந்த பொழுதினை மறுத்தகாலத்து நடுங்கலானி ரென்றமை யின் இஃது அப்பொருட்டாயிற்று.

7. அருண் மிகவுடைமை யென்பது, களவுக்காலத்துப் போலத் துன்பமிகுதலின்றி அருண்மிகத் தோன்றிய நெஞ்சினளாதல்;அது,

'நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்

என்றும் என்றோள் பிரிபறி யலரே” (தற்றிணை. 1)

என வரும்.

8. அன்புதொ.க நிற்றலென்பது, களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் இல்லறத்தின்மேற் பெருகிய விருப்பினானே ஒருங்குதொக நிற்றல்;

'எம்போற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து

நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய என்ன கடத்தளோ மற்றே' (அகம். 176)

என்புழிப், புதல்வற்பயந்து நின்னின் றுறையுங்கடத்தினம் யாமென்றமையின் இஃது அன்புதொ.க நிற்றலாயிற்று.

9. பிரிவாற்றாமை யென்பது, களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறுபோலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப் படாமை; என்னை: புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்தல் கற்பிற்கு வேண்டுவதன்றாகவி னென்பது.

"இடனின்றி யிரத்தோர்க்கொன் lயாமை யிளிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள் தடமென்றோள் பிரியாமை பொருளாயி னல்லதை'

(கலி.2)