பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையியல் 61 படர்க்கை முன்னிலை, தன்மை என்னும் இவ்விடங்களுக்கும் உரியனவாம். பெயரெச்சமும் வினையெச்சமும் வினை நிகழ்ச்சியை யுணர்த் தாது அதனை எதிர்மறுத்துச் சொல்லினும் பெயரெஞ்ச நிற்றலும் வினையெஞ்ச நிற்றலுமாகிய தம் பொருள் நிலைமையில் வேறுபடா. இவ்வெச்சங்களுக்கும் இவற்றை முடிக்குஞ் சொற்களாய் வரும் பெயர் வினைகளுக்குமிடையே முடிக்குஞ்சொல்லொடு தொடர் புடைய வேறு சொல் வந்து நிற்றலுமுண்டு. செய்யுமென்னும் பெயரெச்ச வாய்பாடுகளின் ஈற்றயலெழுத் தாகிய உகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடுங் கெட்டு முடிதலும் உண்டு. செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச் சொல்லோடு இயைதலும், விரை வின்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தோடு மயங்குதலும், மிக்கது ஒன்றின்கண்ணே இறந்தகாலமும் எதிர் காலமும் நிகழ்காலத்தோடு மயங்குதலும், இது செயல் வேண்டும் என்னும் பொருளில் வரும் வினைச்சொல் தானும் பிறருமாகிய ஈரிடத்தும் பொருள் தருதலும், வற்புறுத்தலில் வரும் விளுப் பொருளையுடைய வினைச்சொல் எதிர்மறைப் பொருள் தருதலும், இயற்கை பற்றியும் தெளிவுபற்றியும் காலம் மயங்குதலும், செயப் படுபொருள் வினைமுதல்போல வருதலும், இவ்வாறே வேறிடங் களில் முக்காலமு மயங்குதலும் ஆகிய விதிகளை இவ்வியல் 40-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். இடையியல் இடைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இட்ை யியலென்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து .ே த ற் று த லி ன் அவற்றின்பின் கூறப்பட்டது