பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11? தொல்காப்பியம் நுதலியபொருள் ராயினும் அவற்றுள் அகமெனச் சிறப்பித்தற்குரியன நடுவே எண்ணப்பட்ட ஐந்திணைகளுமே எனவும், அவ்வைந்தின் முன்னும் பின்னுமாக அடுத்தெண்ணப்பட்ட கைக்கிளை பெருந்திணை யென்பன ஒருவாற்ருன் அவற்றின் புறத்தவாகக் கொள்ள தக்கன எனவுங் கருதினரென்பதற்கு, "மக்கள் நுதலிய அகனை ந் திணையுஞ் சுட்டியொருவர் பெயர் கொளப்பெருர்', 'புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் அளவுத லிலவே' எனவரும் அகத்திணையியற் சூத்திரங்களே சான்ருதலின் அவ்விருதிணைகளையும் அகப்புறமெனப் பின்னுள்ளோர் பகுத்தமை தொல்லாசிரியர் கருத்துக்கு முரணுகாமை காண்க. கள்வியல் களவொழுக்கம் உணர்த்தினமையால் களவியலென்னும் பெயர்த்தாயிற்று. களவாவது அன்பு, அருள், அறிவு, அழகு. குடிப்பிறப்பு முதலியவற்ருல் ஒத்து விளங்குதி தலைவனும் தலைவி யும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு, உலகத்தாரறி யாது மறைந்தொழுகுதல். ஐம்பெரும் பாதகங்களுளொன் ருகப் பேசப்படுங் களவென்பது பிறர்க்குரிய பொருளே வஞ்சனை யாற் கவர்ந்துகொள்ளுதலாகிய குற்றமாகும். இஃது அத் தன்மையதன்றி ஒத்த அன்புடைய் கன்னியரை அவர்தம் இசை வறிந்து சுற்றத்தாரறியாது காதலால் உளங்கலந்து பழகும் பெருங்கேண்மை யாதலால் சிறப்புடைய அறமெனவே கொள்ளப் படும். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவரும் தமது நெஞ்சக் கலப்பினைப் பிறரறியாதபடி உலகர் முன் மறைந் தொழுகினராகலின், காந்தவுள்ளத்தர்ாகிய அவ்விருவரது ஒழுக லாறு, களவென்ற சொல்லால் வழங்கப்படுவதாயிற்று. இக் களவினை மறைந்தவொழுக்கம், மறை, அருமறை யென்ற சொற்களால் வழங்குவர் ஆசிரியர்.