பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தொல்காப்பியம் நுதலியபொருள் வெம்மையும் முதலாகவுள்ள யாவும் அடங்கும் தலின், உவமப் பகுதி இந் நான்கே என வரையறுத்தார் ஆசிரியர். ஒரு பொருளோடு ஒரு பொருளே உவமை சொல்லுங்கால் வினை முதலிய இந்நான்கனுள் ஒரோ வொன்றேயன்றி இரண்டும் மூன்றும் பொருந்தி ஒத்துவருதலும் உவமையின் இலக்கணம் என்பர் அறிஞர். செவ்வான் அன்ன மேனி என்பது நிறம் ஒன்றே பற்றி வந்த உவமை. அவ்வான்-இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வையெயிற்று என்புழி வண்ணமும் வடிவும் ஆகிய இரண்டும் ஒத்து வந்தன. காந்தள் அணிமலர் நறுந் தாது ஊதும் தும்பி, கையாடு வட்டிற்றேன்றும் என்புழி, ஆடுதற்ருெழில் பற்றியும் வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும் வண்டிற்கு வட்டுக்காய் உவமையாய் வந்தமை காணலாம். உள்ளத்தாற் கருதியுணருமிடத்து, உவமிக்கப்படும் பொரு ளாகிய உபமேயத்தைவிட அதனியல்பினைப் புலப்படுத்தற் பொருட்டு எடுத்துக் கூறப்பெறும் உவமை, உயர்ந்த பொருளாக அமைதல் வேண்டும் என்பர் ஆசிரியர். இங்கு உயர்ச்சியென்றது வினை பயன் மெய் உரு எனச் சொல்லப்பட்ட பொதுத்தன்மை களால் உவமேயத்தினும் உபமானம் உயர்வுடையதாதலே இவ் வாறு கூறவே, உயர்ந்த பொருளுக்கும் இழிந்த தொன்றினை உவமையாகக் கூறுதல் கூடாதென்பதும், உவமானத்துடன் உபமேயப் பொருள் முழுவதும் ஒத்திருத்தல் வேண்டுமென்ற நியதியின்றி, அதளுேடு ஒரு பகுதியொத்தலாகிய பொதுத் தன்மை அதன்கண் அமைந்திருத்தல் வேண்டுமென்பதும், உலக வழக்கில் இழிந்ததெனக் கருதப்படும் பொருளே உவமையாக எடுத்தாளவேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த வழியும் அதன்கண் அமைந்த உயர்ந்த தன்மையினையே ஒப்புமையாகக் கொண்டு உயர்ந்த குறிப்புப்பட உவமஞ் செய்தல் வேண்டுமென்பதும் ஆகிய விதிமுறைகள் குறிப்பாற் புலப்படுதல் காணலாம்.