பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தொல்காப்பியம் நுதலியபொருள் 31. விருந்து:- விருந்தென்பன்பது, புதிதகாகச் சொன்ன யாப்பின் மேலதாம். புதிதாகப் புனைதலாவது, ஒருவன் சொன்ன நிழல்வழி யன்றித் தானே தோற்றுவித்தல்' என்பர் இளம்பூரணர், புதுவதுகிளந்த யாப்பின்மேற்று என்றது - புதிதாகத் தாம் வேண்டிய வாற்ருற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது. அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினுேர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப' என விளக்குவர் பேராசிரியர், முற்கூறிய தோல் என்பது, பழயை கதையைப் புதிதாகக் கூறலென்றும், ஈண்டுக் கூறிய விருந்தென்பது பழையதும் புதியது மாகிய கதைமேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர் நிலைச் செய்யுள் செய்வதென்றும் இவ்விரண்டற்குமுள்ள வேறு பாட்டினை விளக்குவர் நச்சிஞர்க்கினியர். 32. இயைபு:- ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினுெரு புள்ளியுள் ஒன்றன. இறுதியாகக் கொண்டு முடியுஞ்செய்யுள் இயைபு எனப்படும். இயைபு என்றதனுனே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்துவரும் என்பது கருத்து. சீத்தலைச் சாத்தனராற் செய்யப் பட்ட மணிமேகலையும் கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர் நிலைச் செய்யுளும் போல்வன. அவை னகார வீற்ருன் இற்றன. மற்றையீற்ருன் வருவனவற்றுக்கும் இலக்கியம் பெற்றவழிக் கொள்க. பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்பன பெரும்பான்மையும் உயிரீற்றவாய் வருதலும் இயைபு ஈண்டுக் கூறிய மெய்யீற்றதாய் வருதலும் தம்முள் வேற்றுமை. சொற் ருெடர் என்பன அந்தாதி. எனப்படுவது என்றதனுல் இக்காலத் தார் கூறும் அந்தாதிச் சொற்ருெடருங் கொள்க’ என்பர் நச்சிஞர்க்கினியர்.