பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொல்காப்பியம் ற்ந்நான்கெல்லை யகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின்" எனக்கூறி, வடவேங்கடந் தென்குமரி எனப் பனம்பாரளுர் கூறியவாறு தொல்காப்பியர்க்கு இளையரான காக்கைபாடினியார் எல்லே கொண்டார் என்றும், அவர்க்குக் காலத்தால் மிகப் பிற்பட்டவராகிய சிறுகாக்கைபாடினியார் என்னும் மற்ருெரு புலவர் 'வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம்' எனத் தென்றிசையுங் கடலெல்லையாகத் தமிழகத்திற்கு எல்லை கூறிஞரென்றும், அவர் குமரியாறு உள்ள காலத்தாரல்லரென்றும். அவர் தொல்காப்பியனுரோடு ஒரு சாலை மாளுக்கர் அல்ல ரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டுமென்றும் பேராசிரியர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். அன்றியும் தொல்காப்பியருைம் அவர்க்கு இளையரான காக்கைபாடினியாரும் செய்யுளுக்குத் தளை யென்பதோர் உறுப்பினை வகுத்துரைத்திலரென்றும் தளை வேண் டினர் பிற்காலத்து ஒராசிரியரென்றும் பேராசிரியர் கூறுவர். தொல்காப்பியனர் காலத்தில் இயற்றமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிகளாகவே வகுத்துரைக்கப் பட்டது. சிறுகாக்கைபாடினியார் வாழ்ந்த பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் இவற்றின் வேருக யாப்பு என்னும் இலக்கணம் நான்காவதாக வகுக்கப்பெற்று வழங்கியது. " நாட்டியல் வழக்கம் நான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே " தொல்-செய்யுளியல், சூத்திரம் 1, பேராசிரிய உரை.