பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தொல்காப்பிய ஆராய்ச்சி நிலைநாட்டினர். அவ்வின்ப வாழ்வுக்கு அடிப்படை இல்லற வாழ்வு: இல்லறத்திற்கு இன்றியமையாத வர்கள் காதலால் பிணிப்புண்ட தலைவனும் தலைவியும். ஆதலின் தலைவனும் தலைவியும் கொண்டொழுகும் காதல் தொடர்பினை மையமாகக்கொண்டே இலக்கியங்கள் தோன்றி உருவாகி வளர்ந்தன. இலக்கியம் என்பது வாழ்வின் ஓவியம் என்பது மேலை நாட்டறிஞர் கருத்து. அக்கருத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது பண்டைத் தமிழ் இலக்கியமே. தமிழிலக்கியம் தோன்றிப் பன்னூறு ஆண்டுகள் கழிந்த பின்னரே தொல்காப்பியம் தோன்றியது. தொல்காப்பியம், இலக்கியம் எவ்வாறு இயற்றப்பட வேண்டுமென்பதை இனிது எடுத் தியம்புகின்றது. வாழ்வின் அடிப்படையிலே இலக்கியம் தோன்றுவதால் இலக்கியத்தைப் பற்றிக் கூறுவது வாழ்வுக்கும் பொருத்தமாக அமைந் துள்ளது. பொருட் படலத்தால் இலக்கியத்தைப் பற்றியும் தமிழர் வாழ்வைப் பற்றியும் நன்கு அறிய இயலுகின்றது. எகிப்தியரும், கிரேக்கரும், சீனரும், தொன்மை வாய்ந்த நாகரிகமும் பண்பாடும் உடையவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. தமிழரும் மிகமிகத் தொன்மை வாய்ந்த நாகரிகமும், பண்பாடும் உடையவர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாகும். ஆனால் இத்தொல்காப்பியத்தை உல கம் இன்னும் நன்கு அறிந்திலது. தமிழர்களே அறிந்திலர். தொல்காப்பியப் பொருட் படலம் இலக்கிய விளக்கம் தரும் இன்ப நூலாக மட்டுமன்றி வரலாற்றுக் கருவூலமாகவும் அமைந்துள்ளது.