பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பிய ஆராய்ச்சி சாதிக்கு இன்ன தொழில் தான் என்ற கட்டுப்பாடு கருத்துக்களை வற்புறுத்துவதே கிடையாது.இக் "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையால் பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே" "மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே' எனும் நூற் பாக்கள். இவைகட்குப் பொருள். கூறிய இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும், தமிழ் நூல் நெறி முறைக்கு மாறாக ஆரியர் நெறியினைத் தழுவிக் கொண்டுள்ளனர். 'நால்வர்' என்பதற்கு நான்கு நில மக்களும் என்று பொருள் கொள்ளாது நான்கு வருணத்தார் என்றும், மேலோர் என்பதற்கு "மேன்மையுற்றோர்" என்றும் பொருள் கொள்ளாது. இரு பிறப்பினராய மேல் வகுப்பு மூவர் என்றும். அவருள் சிறந்த பிராமணர் என்றும் பொருள் கொண்டு விட்டனர். ஆகவே பாலைத் திணையாக இலக்கியம் இயற்றப் படுங்கால் தலைவனுக்குக் கொள்ளப்படும் பிரிவு வகைகள் இவையென அறிவிக்கப்பட்டன. ஓதல், தூது, பகை, காவல், பொருள் என்பது களவு, கற்பு எனப்படும். கைகோள் இரண்டுக்கும் பொது வானமையின் இங்குக் கூறப்பட்டன. பரத்தையிற் பிரிவு என ஒன்றுண்டு. அது மணந்து கொண்டு வாழ்க்கை நடத்துங்கால் மட்டுமே நிகழ்வதற்குரித் தாகலின் கற்பியலில் கூறப்படும். நாட்டிடத்தே களவிலும், கற்பிலும் தன் தலைவன் தலைவியை உடன் அழைத்துச் செல்லுதல் கூடும். ஆனால் கடல் கடந்து வெளி நாடு செல்லுங் கால் மனைவியை உடன் அழைத்துச் செல்லுதல் கூடாது.