பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



இரஷ்சிய நாட்டில் :
ஜி.டி. நாயுடு!

இலண்டனில் இருந்து நாயுடு சோவியத் ருஷ்ய நாட்டுக்குச் சென்றார். இங்கிலாந்து நாட்டைப் போல இரஷ்யா ஒரு பரபரப்பான - சுறு சுறுப்பான நாடாக இருக்கவில்லை. ஏதோ ஓர் அமைதி அங்கு நிலவியதால், ஜி.டி. நாயுடுவைப் போன்ற ஒரு சுறு சுறுப்பான மனிதருக்கு அந்த நாடு பிடிக்கவில்லை.

பிரிட்டீஷ்காரர்களைப் போல, இரஷ்யர்கள் மனித நேயத்தோடு பழகும் சுபாவம் உடையவர்கள் அல்லர் என்பதை அவர் உணர்ந்தார். மாஸ்கோ நகரில் ஜி.டி. நாயுடு நான்கு நாட்கள் தங்கியிருந்தார். இரஷ்யாவிலிருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களைப் பார்த்தார். அங்கிருந்து ஜெர்மன் நாட்டிலுள்ள பெர்லின் நகர் வந்தடைந்தார்.

இட்லரோடு பேட்டி கண்டு
படம் எடுத்துக் கொண்டார்!

பெர்லின் நகருக்கு வந்த ஜி.டி. நாயுடு ஜெர்மன் சர்வாதிகாரியான இட்லரைச் சந்திக்க விரும்பினார். அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டும் சரியான சூழ்நிலை அமையவில்லை. பிறகு வேறு சிலர் மூலமாக நாயுடு முயற்சித்தபோது, ஹிட்லர் தனக்கு நேரமில்லை என்று கூறி விட்டார். ஆனாலும், ஹிட்லரைப் பார்க்காமல் பெர்லினை விட்டுப் போகக் கூடாது என்ற வைராக்கியத்தோடு, 'டாம்' என்ற புகழ் பெற்ற, உணவு மாளிகையில் திரு. நாயுடு தங்கியிருந்தார். அந்த இடத்திற்கு அரசியல்வாதிகள் அடிக்கடி வந்து தங்குவது உண்டு.

ஒரு நாள் டாம் என்ற அந்த உணவு மாளிகைக்கு, எதிர்பாராவிதமாக, நாசிக் கட்சித் தலைவரான அடால்ப் ஹிட்லரும், கோயரிங், லே.ஹெஸ். கோயபல்ஸ் ஆகியோரும் வந்தார்கள்.

அதைக் கேள்விப்பட்ட திரு. நாயுடு, தனது அறையை விட்டு அவசரமாகப் புறப்பட்டு வரவேற்பு அறைக்குச் சென்று, இட்லர் தங்கியிருக்கும் அறை எண் எது என்று விசாரித்து அறிந்து, அங்கே