கலைஞரின் சட்டமன்ற உரைகள்
105
கழக அரசு மீண்டும் வந்து அறிவிக்கப்பட்ட பணிகள், நடை பெற்றுவருகின்ற தொழிற்சாலைகள் - 12-ஆவதாக பில் கோ கிளாஸ் கம்பெனி லிமிடெட், புவனகிரியில் ரூ. 17.90 கோடி செலவில் கூட்டுத் துறையில் தொடங்கப்படும் தொழிற்சாலை. நிலம் கையகப்படுத்தப்பட்டு 27-8-1989 அன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே ஷீட்கிளாஸ்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.
பதின்மூன்றாவதாக Dandeck Agro Chemicals Limited கடலூடிலே ரூ. 5.48 கோடி செலவிலே கூட்டுத் துறையில், நிறுவப்பட உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை ஆகும். இதுவும் 27-8-1989-லே அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
14- -ஆவதாக, Sterling Dungston Products கடலூரில் ரூ. 45 கோடி செலவில் கூட்டுத் துறையில் தொடங்கப்படுகின்ற தொழிற்சாலை ஆகும். டங்ஸ்டன் பௌடர் பாதுகாப்புத் துறைக்குப் பெரிதும் பயன்படுகின்ற ஒன்று. கொரிய நிறுவனம் ஒன்றோடு தொழில் நுட்ப ஒப்பந்தத்திற்கான பேச்சுக்கள் விரைந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட இருக்கின்றது, ரூபாய் 45 கோடி முதலீட்டில்.
இது தவிர, அண்மையில் மேலும் 3 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. பெரிய தொழில் திட்டங்கள்.
அனிலைன் திட்டம் - ரூபாய் 110 கோடி செலவில் இராணிப் பேட்டையில் கூட்டுத் துறையில் அனிலைன், நைட்ரிக் அமிலம், அமோனியம் நைட்ரேட் போன்ற இரசாயனப் பொருள்களைத் தயாரிக்கின்ற தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலைக்காக சில இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
16-ஆவதாக “மினரல்செபரேஷன் பிளான்ட்” என்ற தொழிற் சாலை ரூபாய் 20 கோடி முதலீட்டில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்தும் தொழிற்சாலை. சிதம்பரனார் மாவட்டம், குதிரைமொழித்தேரியில் அமையும் தொழிற்சாலை இது. தோரியம், இல்லுமினேட் போன்ற பொருட்கள் இதில் உற்பத்தியாகும்.