கலைஞரின் சட்டமன்ற உரைகள்
117
என்பதையும் நான் ஞாபகப்படுத்த
நிலை உருவானது கடமைப்பட்டு இருக்கிறேன்
இதனால், இப்படி இந்த விலை மாற்றங்களின் காரணமாக டாமினுக்கு ஏகப்பட்ட நஷ்டம். கிட்டத்தட்ட டாமின் வசம் 3,500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் இருக்கிறது. அதிலே 2,500 ஏக்கரில் ஏற்பட்ட நஷ்டம் அந்த நேரத்திலே 10 கோடி ரூபாய், எனவேதான் அந்த அதிகாரி மீது நாம் இன்றைக்கு நடவடிக்கைகளை மேற் கொண்டு இருக்கிறோம்; விசாரணை முறைப்படி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது; மேலும் நடவடிக்கை எடுக்க சில ஆதாரங்கள் தேவைப்படுகிற காணத்தால் இங்கு மாத்திரம் அல்ல, வெளிநாட்டிலே இருந்தும் கூட ஆதாரங்கள் தேவைப்படுகின்ற காரணத்தாலே சற்றுக் கால தாமதம் ஆகிறதேயல்லாமல் நிச்சயம் தவறு செய்தவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள்; தண்டிக்கப் படுவார்கள் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). 1987-88-ல் இதைப் பார்த்தால் புரியும். 1987-88-ல் விற்பனை 11.75 கோடி ரூபாய்; மொத்த நஷ்டம் 11 இலட்சம் ரூபாய். 1988-89-ல் விற்பனை 10.63 கோடி ரூபாய்; லாபம் 2.12 கோடி ரூபாய், புத்தகத்திலே கூட தவறாக 2.1 என்று போட்டு விட்டார்கள். இப்போது 1989-90-ல் விற்பனை 14.14 கோடி ரூபாய்; லாபம் 5.27 கோடி ரூபாய். இந்த 5.27-ஐ புத்தகத்திலே 2.12 என்று தவறாக அச்சாகி இருக்கிறது; திருத்திப்படித்துக்கொள்ள வேண்டு கிறேன். 11 கோடிக்கு விற்பனையான போது 11 இலட்சம் நஷ்டம். 14 கோடிக்கு விற்பனை ஆகிற போது இப்போது 5 கோடி ரூபாய் லாபம் என்றால், எவ்வளவு பெரும் தவறு அதிலே நடைபெற்று இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். எனவே தான் இதிலே நடைபெற்று இருக்கின்ற தவறுகளை விசாரிக்க, நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்காது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிவகங்கை கிராஃபைட்டைப் பற்றியும் இங்கே பேசி இருக்கின்றார்கள். அதிலும் இந்த அதிகாரிதான் இருந்தார். இந்த அதிகாரி இருந்து தீட்டப்பட்ட திட்டம் அது. 1984ஆம் ஆண்டு 85 சதவீத கரிச்சத்தோடு கூடிய கிராஃபைட் சுத்திக்கரிப்பாலை