உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

தொழில்துறை பற்றி

பட்ட முதல் ஆண்டிற்கான விற்பனை வரியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இஃதன்னியில் தற்போது தமிழகத்தில் இதர பகுதிகளில் முன்னோடித் தொழில்களைத் (பையனியர் இன்டஸ்ட்ரீஸ்) தவிர, இதர தொழில்களுக்கு விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் கிடையாது - இதுவரையிலும் கிடையாது - இனி - மேல் இதரத் பகுதிகளில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். இதர பகுதிகளில் தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் (பகுதி 1) புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் (பகுதி 2) இந்தத் திட்டம் பொருந்தும். புதிய தொழில்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விற்பனை வரி தள்ளி வைப்பு வழங்கப்பட்டு உச்ச வரம்பு மூலதனச் செலவில் 60 சதவீதம் என்று வழங்கப்படும். ஏற்கெனவே இருக்கும் தொழில்களுக்கு விரிவுபடுத்துவதற்கு இந்த உச்ச வரம்பு மூலதனச் செலவில் 50 சதவீதமாக இருக்கும்.

மேலும் மாநிலத்தில் பெரிய தொழில்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் 50 கோடி ரூபாய்க்கு மேல் மூலதனச் செலவில் தொடங்கப்படும் தொழில்களுக்கு சிறப்புச் சலுகையாக மாநிலத்தில் எந்தப் பகுதியில் தொடங்கினாலும் 9 ஆ ண்டுகளுக்கு விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டம் மூலதனச் செலவு அளவிற்கு வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). இந்த அறிவிப்பின் மூலம் மாநிலத்தில் பெரிய தொழில்கள் ஏற்பட நல்ல வாய்ப்பு உருவாகும் என்று நான் நம்புகிறேன். எனவே நீங்கள் தந்துள்ள பல்வேறு கருத்துக்களை எல்லாக் கருத்துக் களுக்கும் விடை அளிக்க, விளக்கம் அளிக்க நேரம் இல்லை என்றாலும் கூட அவைகளையெல்லாம் நெஞ்சிலே பதிய வைத்து ஆவன செய்வேன், அனைவரும் சேர்ந்து தமிழகத்திலே தொழில் வளர்ப்போம், வாரீர் என்று கேட்டு வெட்டுப் பிரேரணைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று இறைஞ்சி அமருகின்றேன்.

திரு. எஸ். ஆர். இராதா : பேரவைத் தலைவர் அவர்களே, கடந்தகால ஆட்சியில் செய்யப்பட்ட தொழில்களிலே இன்றைக்கு நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்புகளில் இரண்டு விடுபட்டிருக்கின்றன. ஒருவேளை விடுபட்டதோ அல்லது திட்டமே இல்லையோ என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். மேலூர் பகுதியில்