உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

தொழில்துறை பற்றி

திரு. குமரி அனந்தன்: மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, என்னுடைய அந்த உரையின்போதுகூட, சாத்தான்குளத்தினுடைய பின்தங்கிய நிலையைச் சொன்னேன். நேற்று நமது மாண்புமிகு டாக்டர் பொன்முடி அவர்கள் கூட்டிய அந்தக் குடிநீர்த் திட்டக் கூட்டத்திலே கூட, 'ஒன்றுமே கிடையாது, நீங்கள் ஏதாவது கொடுத்தால்தான் உண்டு குடிப்பதற்கு' என்று சொன்னேன். அதைப்போலவே தயவு செய்து மிகப் பின்தங்கிய பகுதி, நீங்கள். . . .

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : கவலைப்பட வேண்டாம்; சாத்தான், குளத்தில் விழமாட்டான். (சிரிப்பு).

திரு. கே. ரமணி : தலைவர் அவர்களே, கோவை மாவட்டத்தில் பின்தங்கிய வட்டமாக அறிவித்திருந்த அவினாசி இப்போது கொஞ்சம் வளர்ச்சியடைந்து, அந்தப் பட்டியலிலிருந்து போய்விட்டது. ஆனால் பல்லடம் தாலுக்கா இருக்கிறதே, அதிலே முக்கியமான பகுதி, நம் பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏ., இருக்கக் கூடிய பகுதி கூட இருக்கிறது. அதைப்பற்றி ஒன்றும் வரவில்லை. நான் முக்கியமாகக் கேட்கக்கூடியது அந்த மூடப்பட்ட பஞ்சாலை களைப் பற்றிச் சொன்னதிலே, அதைப்பற்றி ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை நடக்கிறது என்று சொன்னார். அதை வரவேற்கிறேன். புதுக்கோட்டையில் இருக்கும்படியான காவேரி மில்லும், நமன சமுத்திரத்திலே இருக்கக்கூடிய மில்லும், மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவே மூடிக் கிடக்கின்றன. அந்தத் தொழிலாளிகள் இப்போது ரொம்பக் கஷ்டத்திற்கு ஆளாகி அவர்கள் போராட்டம் எல்லாம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி இந்தப் பட்டியலிலும் வரவில்லை. ஒன்றுமே சொல்லப்படாமல் இருக்கக்கூடிய ஒரு நிலை. . .

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் திறக்கப் படவே முடியாது என்று சொன்ன பட்டியலில் அந்த மில் இல்லை. ஆய்வு நடத்தப்படுகின்ற பட்டியலில் அந்த மில் இருக்கிறது.