உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

தொழில்துறை பற்றி

ஆட்சியில் ஃபோர்டு நிறுவனத்திற்கு நில ஆர்ஜித சட்டத்தின்கீழ் 335 ஏக்கர் ஒப்படை செய்யப்பட்டது. தற்பொழுது கொரியாவின் ஹுண்டாய் நிறுவனத்திற்கு, அதே நில ஆர்ஜித சட்டத்தின்கீழ் 534 ஏக்கர் தரப்பட்டுள்ளது. இதிலே, நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இந்த நிலத்தை அரசாங்கத்தின் அனுமதியின்றி அந்த நிறுவனம் வேற யாருக்கும் விற்கவோ மாற்றவோ கூடாது இது நம்முடைய ஒப்பந்தம். ஆனால், அ.தி.மு.க. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அதுபோன்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. அவர்கள் இஷ்டத்திற்கு யாருக்கும் விற்றுக் கொள்ளலாம். இந்தக் கட்டுப்பாடு அந்த ஒப்பந்தத்திலே இல்லாத காரணத்தால், அரசாங்கம் தொழிற்சாலை தொடங்குவதற்கு ஒப்படை செய்த நிலத்திலே ஒரு பகுதியை அவர்கள் விலைக்கு விற்கக்கூட உரிமை உண்டு என்று ஆகிறது.

எனவே, இந்த 3 மாத காலத்தில் இந்த இரண்டு கார் ஒப்பந்தங்களுக்குப் பிறகு, இந்த அரசு செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தம், எம்.ஓ.யூ. கையெழுத்தான மற்றொரு தொழிற்சாலை, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பில்கிங்டன் நிறுவனம் 550 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கற்பட்டுக்கு அருகில் செங்குன்றம் கிராமத்தில் கண்ணாடி தொழிற்சாலை -- இதற்கான கையெழுத்து 16-7-1996-ல் ஆனது. கொரியா காருக்கான கையெழுத்து 18-7-1996-ல் ஆகி இருக்கிறது. இந்த இரண்டு மூன்று மாத காலத்திலே இந்த இரண்டு பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்திற்குக் கொண்டுவந்த பெருமை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்களுக்கும் இந்த அரசுக்கும் (மேசையைத் தட்டும் ஒலி) உண்டு என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மூன்றாவதாக எம்.ஓ.யூ. கையெழுத்தான மற்றொரு தொழிற்சாலை டிட்கோ நிறுவனமும் மத்திய அரசுக்கு சொந்தமான டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ஸி இந்தியா லிமிடெட் நிறுவனமும் இணைந்து 'கியூஜி குரா' என்ற ஜப்பான் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி உதவியுடன் ஆப்டிக்கல் ஃபைபர் டெலிஃபோன் கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை 41.5 கோடி ரூபாய் முதலீட்டில் மறைமலைநகரில் தொடங்குவதற்கான