உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

தொழில்துறை பற்றி

கொண்டே போகிற நேரத்தில், அதற்காக காத்திராமல் மிகக் குறைந்த தேதியிலே ரெக்கார்டு தேதியை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நிர்ணயம் செய்த காரணத்தால்தான் இந்த 82 கோடி ரூபாய் அளவிற்கு அந்த நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மத்திய அரசினுடைய தணிக்கை அதிகாரி 12 கோடி என்கிறார். எனக்குக் கிடைத்த விவரத்தின்படி 80 கோடிக்கு மேல். எப்படியோ கோடி கோடியாக போய் இருக்கிறது. இதுதான் உண்மை. இதிலே, இந்த மத்திய அரசினுடைய தணிக்கை அதிகாரியினுடைய அறிக்கை இந்த அவையிலே இருந்தபோது, அதைப்பற்றிப் பேச எந்த உறுப்பினருக்காவது வாய்ப்பு கிடைத்ததா, பேச முடிந்ததா? (குறுக்கீடு). 'had TIDCO adopted this rate for computing the value of premium to be received it would have a revenue advantage of Rs. 12.09 crores' அதாவது டிட்கோ நிறுவனம் இந்த முறையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, பிரிமியம் வசூலித்து இருந்தால். 12.09 கோடிரூபாய் வருவாய் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்று மத்திய அரசின் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் 'as such discounting the rate further to arrive at the present value was not proper and was not sup- ported by said formula'. அதாவது, இந்த நிலையில், தற்போதைய நிலையில், மேலும் தள்ளுபடி செய்தது முறையானது அல்ல, எந்தக் கொள்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், இருக்கலாம். கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதில் யாருக்கும் இன்னொரு கருத்து இருக்க முடியாது அந்த நிலையிலேதான் அந்தப் பங்கு விற்பனை நடைபெற்றிருக்கிறது.

தலைவர் அவர்களே, இந்த அரசு தொழில் அதிபர்களைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு அரசாங்கம் உதவியாக இருக்கவேண்டும். அதாவது 'Investor-friendly' என்று நிதிநிலை அறிக்கையிலேயே நான் குறிப்பிட்டு இருக்கிறேன். அதுமாத்திர மல்ல, விரைந்து முடிவு எடுக்கவேண்டிய ஒரு அரசுதான் முதலீட்டாளர்களுக்குத் தேவையும் கூட. நம்முடைய பழனிசாமி அவர்கள் பேசும்போது இதைக் குறிப்பிட்டார். விரைவில்