உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தொழில்துறை பற்றி

இடத்தை மாத்திரம் வளப்படுத்துவது. எங்கள் அண்ணாவின் ஆசை தமிழ்நாட்டையே வளப்படுத்துவது. ஆகவே தயவுசெய்து அந்த இடத்தை விட்டுக்கொடுங்கள் என்று கேட்டு அவரிடத்திலே பிறகு பேச வேண்டிய முறையில் எல்லாம் பேசி, பிறகு அவர் வேறு வழி இல்லாமல் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அவர் தாக்கல் செய்திருந்த வழக்கைத் திரும்பப் பெற்று, அடுத்த ஒரு வாரத்திற்கெல்லாம் அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வி. அவர்களை அழைத்து அதனுடைய தொடக்க விழா நடைபெற்றது. அதற்குப் பிறகு அதனுடைய பணிகள் பாதி அளவிற்கு நிறைவேறிய நேரத்திலே ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சியிலே இந்தத் திட்டம் தொடர்ந்தது என்பதைத் தவிர, தொடர்ந்த நேரத்திலே எவ்வளவு ஊழல்கள் அதிலே உருவாயின. எத்தனை வழக்குகள் நடைபெற்றன என்பதையும் நாடு மிக நன்றாக அறியும். இந்த ஒரு திட்டத்தைத் தவிர மின்சாரத் துறையில் வேறு எதுவும் நடைபெறவில்லை. அதுவும் எம்.ஜி.ஆர். தொடங்கி, பிறகு கைவிடப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டம் அந்த ஒரு திட்டம்தான். அதன் பிறகு இப்போது இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, 100 மெகாவாட் திறன் கொண்ட 20 மின் திட்டங்களை டிட்கோ மூலம் இணைத்துறையிலோ அல்லது கூட்டுத் துறையிலோ. அசோசியேட் செக்டாரிலோ அல்லது ஜாயிண்ட் செக்டாரிலோ தொடங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை மின்சாரம் தேவை தொழிலுக்கு என்று இங்கே வலியுறுத்திய அறிவுறுத்திய உறுப்பினர்களுக்கு எல்லாம் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). ஒவ்வொன்றும் 100 மெகாவாட் திறன் உள்ள 20 மின் திட்டங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த 100 மெகாவாட் திட்டம் ஒவ்வொன்றின் உத்தேச மதிப்பீடு ரூ. 400 கோடியாகும். மொத்தம் 2000 மெகாவாட் இந்த 20 திட்டங்களில். 20 திட்டங்களுக்கும் சேர்ந்து மொத்த முதலீடு ரூ. 8000 கோடியாகும். இந்தத் திட்டம் ரூ நிறைவேற உத்தேசிக்கப்பட்ட இடங்கள் மணலி, கும்மிடிப் பூண்டி, அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பெரும்புதூர், மறைமலை நகர், கடலூர்-1, கடலூர்-2, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருமங்கலம், வாடிப்பட்டி,