கலைஞரின் சட்டமன்ற உரைகள்
155
தொடங்க நாட்டிலேயே தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலம் ஆகும். சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. 4,010 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இரண்டு பன்னாட்டுத் துறைமுகங்கள் உள்ளன. ஒரு பன்னாட்டு விமான நிலையமும். 5 உள்நாட்டு விமான நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. அதுமட்டுமல்ல, 4366 வங்கிக் கிளைகள் தமிழகத்தில் உள்ளன. 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. (இது 72-ஆம் வருடமே சாதிக்கப்பட்ட ஒரு காரியம் ஆகும்.) நகர்புற வளர்ச்சி 36 சதவிகிதமாக உள்ளது என்று சொல்லிவிட்டு இவ்வளவுக்கும் மேலே ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் என்ன சொன்னார் என்பதைத்தான் பத்திரிகை எழுதுகிறது. Says one well-known Industrialist, "We do not mind corruption so long as it delivers the goods. In the case of the AIADMK Government, the irritant is that it fails to honour its commitment for which we have already paid a fee." கரப்ஷனைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை; கொடுத்து காரியம் நடக்க வில்லையே என்பதுதான் கஷ்டமாக இருக்கிறது என்று ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் சொன்னார் என்பதாக பிஸினஸ் இண்டியா எழுதுகிறது.
Says one Madras-based Industrialist: "You need not cultivate every Tom, Tick & Harry. If you can please the presiding Deity"
- மூலவிக்கிரகத்தைப் பார்த்தால் போதும் -
"Your interests are taken care of. But, if you fall out ever, your life is a mess. Jayalalitha's whimsical behaviour has been reported to put off several major industrial houses."
எந்த ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு லஞ்சம் தரவேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரையில் எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால் நாங்கள் லஞ்சம் கொடுத்தாலும்கூட எந்த காரியமும் நடைபெறவில்லை என்பது தான் என்று ஒரு பிரபல தொழிலதிபர் ஒருவர் அண்ணா தி.மு.க. அரசில் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற