உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

161

அதைப்போலவே, கூட்டுறவு ஆலைகளுக்குத் தேவையான கோணிப் பைகள் நேற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசும்பொழுதும் அந்தக் கோணிப் பைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவருக்கு நான் என்ன இளப்பமா என்பதைப் போல, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் இந்தக் கோணிப் பை தகராறு நிறைய நடைபெற்றிருக்கிறது.

உதாரணமாக, 900 பேல்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப் பட்டு சித்தவலசா நிறுவனம் 100 கோணிப் பைகளுக்கு ரூபாய் 198 வீதம் விலை குறிப்பிட்டிருந்தார்கள். அவன் குறிப்பிட்ட விலை, 100 கோணிப் பைக்கு 198 ரூபாய். இவர்கள் அவனைக் கேட்கிறார்கள். இது மிகக் குறைவாகக் குறிப்பிட்டிருக்கே, நீ அதிக விலை குறிப்பிடு என்று சொல்லி 100 கோணிப் பைக்கு 299 ரூபாய் விலை குறிப்பிட்டு அதன்படி மறு ஒப்பந்தப் புள்ளி கொடுத்து வாங்கப்பட்டதில் இழப்பு 3 கோடி ரூபாய். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு.

மேலும், அருணா ஷுகர்ஸ் என்ற தனியார் நிறுவனம் கோணிப் பைகள் வாங்கிய விலையைவிட சர்க்கரை ஆலை ஃபெடரேஷன் அதிக விலை கொடுத்து, இந்தக் கோணிப் பைகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அங்கே தனியார் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அதைவிட இந்த நிறுவனம், பெடரேஷன், அதிக விலை கொடுத்து அந்தக் கோணிப் பைகளை வாங்கியிருக்கிறது.

அதே போல, சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்கள் மற்றும் சுண்ணாம்பு வாங்கியதிலே மாத்திரம் 1994-95 ஆம் ஆண்டு சுண்ணாம்பு ஒரு மெட்ரிக் டன் 200, 200 ரூபாய் வீதம், 15,200 மெட்ரிக் டன் வாங்கினார்கள். டன் ஒன்றுக்கு கூடுதலாகக் கொடுத்து. நீங்களே கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், அடுத்த ஆண்டு 1995-96-ல் மெட்ரிக் டன்னுக்கு கூடுதலாக கொடுத்து விட்டது 439 ரூபாய். அது மாத்திரமல்ல, முதலாம் ஆண்டு 15,200 மெட்ரிக் டன் வாங்கினார்கள். அடுத்த ஆண்டு தேவையில்லாமலேயே 23,990 மெட்ரிக் டன் வாங்கியிருக்கிறார்கள், அதிக விலை கொடுத்து.