உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

தொழில்துறை பற்றி

எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டால், உண்மை பலகாலம் இருட்டிலே இருக்காது, வெளிச்சத்திற்கு வந்துவிடும். இருள் எப்படிச் சூரியனைத் தொடர்ந்து மூடிக்கொண்டிருக்க முடியாதோ, எப்படியாவது விடிய்ல வந்தே தீரும் என்ற நிலை இருக்கிறதோ, அதைப்போல, உண்மை வெளிவந்தே தீரும்.

இந்த மானியக் கோரிக்கையிலே, திரு. அழகிரி அவர்களும், இந்திய தேசிய லீக் கட்சியினுடைய தலைவர் திரு. அப்துல் லத்தீப் அவர்களும் எடுத்துரைத்த இரண்டு கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்கள்தான். திரு. அப்துல் லத்தீப் அவர்கள், தொழில் துறையைப் பற்றி எடுத்து வைத்த கருத்துக்களைவிட, அரசியல் துறைக் கருத்துக்களையே அதிகமாக இங்கே எடுத்து வைத்தபோதிலும், நாம் எப்படியிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், இந்தியாவிலே மதச் சார்பற்ற ஒரு அரசு அமைந்திடவும் ஜனநாயக ஆட்சி தொடர்ந்து நடந்திடவும் பாடுபடக்கூடிய அந்தப் பாசறையில்தான் நாம் இருக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே, விவாதத்தைத் தொடங்கி வைத்த அன்பிற்குரிய திரு. அழகிரி அவர்களுக்கும், தொடர்ந்து சில கருத்துக்களைச் சொன்ன அருமை நண்பர், திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

தொழில் துறையைப் பற்றிப் பேசும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய திரு. மணி அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய திரு. சுப்பராயன் அவர்களும், தமிழகத்திலே பொதுத் துறை நிறுவனங்கள் மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி, அதற்கு இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கூறியிருக்கின்றார்கள். இந்த மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலேயே, தமிழகத்தில் தற்போது 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டுடன் 13 பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், மேலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், சென்னை எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனம், சேலம் உருக்காலை, இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் போன்ற பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பில், விரிவாக்கல், உற்பத்தித் திறன் அதிகரித்தல் ஆகிய பணிகளை உடனடியாக