உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

தொழில்துறை பற்றி

என்று சுருக்கமான பெயரோடு அமைந்தது என்பதையும் அவை உறுப்பினர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இன்றைக்கு 'எல்காட்' நிறுவனம் வளர்ந்து ஏறத்தாழ 200 கோடி ரூபாய் அளவுக்குத் தமிழகம் முழுவதும் மின்னணுத் தொழில் பிரிவுகள் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி 'சிப்காட்' 'சிட்கோ', 'எல்காட்' போன்ற நிறுவனங்களைத் தோற்றுவித்ததன் மூலம் தொழில் பெருவாரியாகத் தமிழ்நாட்டிலே வளருவதற்குக் கழக அரசு வழி வகுத்தது. தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், கடன் வசதிகளை அவர்கள் தாராளமாகப் பெறவும் கழக அரசு உதவிடத் தொடங்கியது. மேலும் வரி விலக்கு அளித்தல், விற்பனை வரி வசூலைத் தள்ளி வைத்தல், மின்கட்டணச் சலுகை அளித்தல் போன்ற பல்வேறு உதவிகளை வழங்கி புதிய தொழில்கள் தமிழகத்திலே உருவாகக் கழக அரசு காரணமாக ருந்தது. 1975ஆம் ம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் திரு. வில்லியம் வித்தர்ஸ் என்பவர் தமிழ்நாட்டுக்கு வந்து திரும்பிச் சென்றார். அவர் தாயகம் திரும்பியவுடன் மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்திலே பேசினார்.

தமிழகத் தொழில் வளத்தைப் பற்றி அங்கே பேசினார். என்ன பேசினார் என்றால், 'தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்கு உதவுவதற்கான பல கவர்ச்சிகரமான கருத்துக்களைக் கொண்டுள்ளது, தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் தொழிற் சாலைகளைத் தொடங்கிட பெரு முயற்சி செய்வதோடு, பல்வேறு சலுகைகளையும் அளிக்கிறது. அச்சலுகைகளில், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் எந்த ஒரு வெளிநாட்டு தொழிற்சாலைக்கும் இரண்டு ஆண்டு காலத்திற்கு வரி கிடையாது என்பதும், புதிய தொழிற்சாலைகளின் வளர்ச்சி காலத்தில் மின் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்பதும் அடங்கியுள்ளன. இவற்றைச் சிறந்த பணிகள் என்று நான் கருதுகிறேன். நம் நாட்டில் தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிடும்போது, அதாவது மேற்கு