184
தொழில்துறை பற்றி
இதேபோல், ஜல்லி, சிறு கனிமங்கள் என்று சொல்லப் படுகின்ற மணல் போன்ற சிறு கனிமங்கள் சம்பந்தப்பட்ட விதிகள் 8, 8-ஏ, இவைகளுக்கு இந்த அரசு திருத்தம் கொண்டுவந்து டெண்டர் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த நடைமுறை மாற்றத்தின் காரணமாக, உதாரணமாக கோவை மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு சொல்லுகிறேன். ஏனென்றால், எல்லா மாவட்டக் கணக்குகளும் எனக்கு வரவில்லை. கோவை மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு சொன்னால், சென்ற ஆண்டு கிடைத்த வருமானம், அந்த ஆட்சியில் கிடைத்த வருமானம் ரூ. 2.88 இலட்சம். அதாவது, ஜல்லி, மணல் போன்ற சிறு கனிமங்கள் மூலம் கிடைத்தது ரூ. 2.88 இலட்சம். அதாவது, கோவை மாவட்டத்தில் மாத்திரம் கிடைத்த வருமானம். இந்த ஆண்டு ரூ.26.17 இலட்சம் கோவை மாவட்டத்திலே மாத்திரம் கிடைத்திருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) எவ்வளவு கொள்ளை போயிருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். இது, பழைய முறைப்படியே, அவர்கள் வைத்திருந்தார்களே டெண்டர் இல்லாத பழைய முறைப்படி அவர்கள் வசூலித்தது ரூ. 2.88 இலட்சம், அதே முறைப்படி நாம் புதியதாக ஆக்கியிருக்கிற காரணத்தால் நமக்கு கிடைக்க இருப்பது 67.32 இலட்சம், கோவை மாவட்டத்திலே மாத்திரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது, இந்தப் புதிய மாற்றத்தின் அடிப்படையிலே என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படி, பொறுப்பற்ற தன்மையில் தொழில் துறை கவனிக்கப்படாமல் இருந்தது என்பது மாத்திரமல்ல, தொழில் முனைவோர்கள் யாரைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரு கொள்கை வகுக்கப்பட்டு, தொழில்துறை அடியோடு நாசமாகிப் போனதை, நானல்ல, "Economist Intelligence Unit" என்ற ஒரு ரிசர்ச் யூனிட்டினுடைய ரிப்போர்ட் "India uncaged" என்ற தலைப்பில் "Seeking opportunities in the South" - தெற்கே உள்ள வாய்ப்புகள் "India uncaged" என்ற தலைப்பில், நவம்பர் 1995-ல் வந்த கட்டுரை. அதிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். "The Report says - "If there is any State. . . கவனமாக பார்க்கவேண்டும், "If there is any State with a reputation for corruption, it is Tamil Nadu". 'ஏதாவது ஒரு