உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

189

ஆணையகங்கள் Executive Authority ஏற்படுத்தப்படும். நிர்வாக ஆணையகங்கள் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா உரிமங்களையும் உடனுக்குடன் வழங்குவதற்கு அதிகாரம் உள்ள ஓர் அமைப்பாகச் செயல்படும்.

மணல், ஜல்லி, களிமண் குவாரிகள் மாவட்ட ஆட்சியர், புவியியல் துறை அலுவலர்களால் முறைப்படி குத்தகைக்கு விடப்பட்ட பின், குவாரிகளிலே இருந்து கனிமங்களை எடுத்துச் செல்வதில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல், உள்ளாட்சிக்கு வரவேண்டிய முழு வருவாயும் வந்துசேர ஏதுவாக குவாரி நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுப்பு உள்ளாட்சி மன்றங் களுக்கே இனிமேல் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). இதன்படி குவாரியிலிருந்து Load - சரக்கு ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு முறையும் அதற்குரிய காணிக் கட்டணத்தை (Seignior- age fee) உள்ளாட்சி அமைப்பின் கணக்கில் வங்கியில் செலுத்தி விட்டு, அதன்பின், உள்ளாட்சி அமைப்பு வழங்கும் வாகன அனுமதியைக் (Transport Permit) கொண்டுதான் லாரி சரக்குடன் செல்ல அனுமதிக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). அனுமதி வழங்கும் பொறுப்பை ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவருடனோ அல்லது வேறொரு உறுப்பினருடனோ இணைந்து கவனிக்க வேண்டும். ஊராட்சி மன்றத்திற்கு இப்பொறுப்பு வழங்கப்படுவதால், தவறான வழிகளில் மணல், ஜல்லி முதலியன கடத்தப்படுவது தடுக்கப்படுவதோடு, ஊராட்சி மன்றத்திற்கு வருவாயும் பெருக வழியேற்படும்.

புதிதாக உருவாகும் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் அளவில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே, பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நிறைய எண்ணிக்கையில் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ) தொடங்கிட இந்த அரசு ஆவன செய்யும். இதன் விளைவாக ஏராளமான இளைஞர்கள் பல்வேறு தொழிற்பயிற்சிப் பிரிவுகளில் முறையான பயிற்சி பெற்று, உருவாகி வரும் புதிய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு ஐ.டி.ஐ. அமைக்க முடிவெடுத்து அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.