உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

தொழில்துறை பற்றி

-

1,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் தாமிரத் தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. அந்தத் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள், அந்த எதிர்ப்பின் காரணமாக அரசு எடுத்த முயற்சிகள் தொழிற்சாலையும் நடக்கவேண்டும். தொழிற்சாலையிலிருந்து வருகிற கழிவுப் பொருள்கள் காரணமாக மக்களும் பாதிக்கப்படக் கூடாது, மீனவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்று எடுத்த முயற்சியின் அடிப்படையில், அந்தத் தொல்லைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு, தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மணலியில் கூட்டுத் துறையில் ரூ. 50 கோடியில் பல்க்டிரக் இண்டர்மீடியட்ஸ் தொழிற்சாலை அமைக்கப்படும்.

70 கோடி ரூபாய் முதலீட்டில் இண்டஸ்ட்ரியல் என்சைம் தொழிற்சாலை தொடங்கப்படும்.

‘டான்சம்' நிறுவனம் மூலம் விருத்தாசலத்தில் 1.4 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டு ஒன்றுக்கு 1,920 டன் உயர்தர அலுமினிய கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடப்பாண்டில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கன்னியாகுமரியில் ரப்பர் தொழிலைப் பற்றி நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் மணி அவர்களும், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் மோசஸ் அவர்களும் எடுத்துச்சொல்லி, எப்படி ஊருக்குப் போவோம் என்றெல்லாம் கேட்டார்கள். தைரியமாக நீங்கள் ஊருக்குச் செல்லலாம், நானும் பல ஆண்டு காலமாக அங்கே எப்படியும் ரப்பர் தொழிற்சாலை வந்தே தீர வேண்டுமென்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ரப்பர் தொழிற்சாலை என்ற காரணத்தால் அது நீண்டு கொண்டே போகிறது. (சிரிப்பு) எனவே, இந்த ஆண்டில் எப்படியும் தொழிற்சாலை வர நான் விடேன் தொடேன் என்று முயற்சி மேற்கொள்வேன், அதுதான் எனக்கு முதல் வேலை என்பதை கன்னியாகுமரியில் உள்ள மக்களுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).