202
தொழில்துறை பற்றி
ஒரு யோசனை சொன்னது அந்த வல்லுநர் குழு. தமிழ்நாடு எஃகு நிறுவனத்திற்கு வர வேண்டிய வரவு ரூ. 5.75 கோடி மாத்திரம் தான் என்றிருந்ததால், இந்நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் ரூ. 40 கோடியாக இருந்ததால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை. இந்நிலையில், இந்த ஆலையைச் சீரமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்காததாலும், தொழிலாளர்களும் ஒத்துழைக்காததாலும், இந்த ஆலையை மூடிவிடுவது என அரசு முடிவு செய்ததது. என்றாலும்கூட, தொழிலாளர்களைத் தவிக்க விட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினால், எப்படி பி அண்டு சி பி மில்லில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதோ விருப்பப்படுகிற தொழிலாளர்கள் விலகிக் கொள்ளலாம் என்ற அந்த அடிப்படையிலே பி அண்டு சி மில் தொழிலாளர்களுக்குத் தரப்பட்டதைவிட, அதிகமாக அரக்கோணம் உருக்காலைத் தொழிலாளர்களுக்கு தரப்பட்டது. ரூ. 1.25 இலட்சம் பிளஸ் கிராஜுட்டி இதுபோன்ற இந்தச் சலுகைகள் எல்லாம் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களிலே ஏறத்தாழ சதவிகிதம் பேர் அதற்கு உடன்பட்டு அந்த விண்ணப்பங்களைப் பெற்று, விண்ணப்பங்களையும் திருப்பி அளித்து, அதற்கு உடன்படுகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
90
ஒரு
-
அதேபோல, இந்தச் சுய விருப்பு ஓய்வுத் திட்டத்தை அங்கே அமல்படுத்த எண்ணியபோது, தொழிலாளர்கள், இங்கே பி அண்டு சி மில்லிலே தந்ததைவிட எங்களுக்கு அதிகமாகத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்படித் தருவதற்கும் நாம் சம்மதித்து இருக்கின்றோம். இங்கே ரூ. 1.25 இலட்சம் என்றால் அதைவிட அதிகமாக, அவர்கள் நிறைவு கொள்ளத்தக்க அளவிற்குத் தருவதற்கும் ஒத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், மிக மிக அதிகமாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுவிட்டால் அடுத்து மற்ற தொழிற்சாலைகளிலே உள்ள தொழிலாளர்களுக்கு இதே போன்ற ஒரு கோரிக்கை வைக்கின்ற நிலைமை ஏற்படும் என்ற காரணத்தினால் அரசு இதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தக் காரணங்களினாலேதான் அரக்கோணத்திலே மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டதைப்போல 200 கோடி ரூபாய்