உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

3

205

எப்போது தருவீர்கள் என்றால் 2 ஆண்டுதான் முடிந்திருக்கிறது. இன்னும் 3 ஆண்டு இருக்கிறது. இந்த 3 ஆண்டு காலத்திற் குள்ளாக இந்த ஆயிரம் ரூபாயை கரும்பு விலையாகத் தந்து உங்களுடைய பாராட்டுக்களை எல்லாம் பெறுவோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

அவர்கள் கேட்டார்கள்; தனியார் சர்க்கரை ஆலைகளில் இலாபம் ஏற்படும்போது ஏன் கூட்டுறவு, பொதுத் துறைச் சர்க்கரை ஆலைகளிலே இலாபம் இல்லை என்று திரு. அழகராஜா அவர்கள் கேட்டார்கள். அதற்கான சில விளக்கங்களைத் தர விரும்புகிறேன். 1994-95 மற்றும் 1995-96 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலும், அதேபோல மாநில அளவிலே தமிழகத்திலும் கூடுதலான கரும்பு உற்பத்தி, கூடுதலான சர்க்கரை உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக சர்க்கரையினுடைய விற்பனை விலை சர்க்கரையினுடைய உற்பத்திச் செலவைவிடக் குறைந்து போய்விட்டது. அது நஷ்டத்திற்கு முக்கியமான காரணம். 1994-95 மற்றும் 1995-96ஆம் ஆண்டில் தனியார் ஆலைகள் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கூட்டுறவு ஆலைகளிலே பதிவு செய்யப்பட்ட கரும்பைச் சம்பந்தப்பட்ட தனியார் ஆலைகள் அரைவைக்கு எடுத்துக் கொள்ளாததால் அவற்றையும் கூட்டுறவு ஆலைகளிலே அரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனியார் ஆலைக்காக துக்கப்பட்டு வைக்கப்பட்ட அந்தக் கரும்பை அவர்கள் எடுத்துக்கொள்ளாத காரணத்தால் அவற்றையும் கூட்டுறவு ஆலைகளே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் கரும்பு விவசாயிகள் பயிரிட்டுவிட்ட கரும்பை எப்படியாவது அரைவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளில் கரும்பு அரைவைக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தினுடைய ஆணையின் அடிப்படையில் நீட்டித்த அரைவையின் காரணமாகவும் நஷ்டம் ஏற்பட்டது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தனியார் ஆலைகளைப் பொறுத்தவரை சர்க்கரைத் தொழில் மட்டும் அல்லாமல், அதைச் சார்ந்த எரிசாராயத் தொழிற்சாலை போன்ற இதர தொழில்களின் வருவாயும் தனியார் ஆலைகளுக்கு இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இருப்பினும் அரசு எடுத்த பல நடவடிக்கைகளின்