கலைஞரின் சட்டமன்ற உரைகள்
215
மொத்த முதலீடு 90,609 கோடி ரூபாய் ஆகும். அதாவது 60 மாதத்திலே 90,609 கோடி ரூபாய். அப்போது இம்மாநிலம் அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது, கழக ஆட்சியில். 1998 சனவரி வரை, 20 மாதங்களில் இம்மாநிலம் 33,560 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்று, அது நாட்டின் மொத்த மூலதனத்தில் 17.6 சதவீதம் என்ற நிலையில், மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).
1991-92-இல் 6.781 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி 1996-97-இல் 18.500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 1997-98-இல் 20,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் ஏற்றுமதியிலே தமிழகம் 17 சதவீதத்தை அடக்கியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
-
'பி.டி. கேலம்' 1997 டிசம்பரில் வெளியிட்ட முதுநிலை வணிக நிர்வாக ஆய்வு அறிக்கையில் முதலீட்டாளர்களை மிகவும் கவருவதில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும்கூட, Business Today 'the best States to invest in' என்ற இந்த பத்திரிகையில், முதல் இடத்திலே திரு. மனோகர் ஜோஷி அவர்களுடைய படத்தைப் போட்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடமும், இரண்டாவது இடம் குஜராத் அதிலே திரு. திலீப் பரீக் அவர்களுடைய படத்தைப் போட்டு இரண்டாவது இடமும், தமிழ்நாடு என்று என்னுடைய படத்தைப் போட்டு, தமிழ்நாடு மூன்றாம் இடம் என்றும் (மேசையைத் தட்டும் ஒலி) வெளியிட்டு இருப்பதை உங்களுக்கு எல்லாம் நான் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். அதிலே ஒன்றைச் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன். இந்த இடங்களிலே ஒரு சிறு தகராறு என்னவென்றால், மகாராஷ்டிரா, Objective-லும் 1, Perception-லும் 1, Rank-லும் 1: இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. குஜராத் Objective-லே 3, Perception-லே 2, Rank-லே 2; தமிழ்நாடு Objective-லே 2, Perception-லே 3, Rank-லே 3: இதற்கு என்ன விளக்கம் என்றால் Objective என்றால், உண்மை, உண்மையான நிலை. Perception என்றால் பார்வையிலே பார்க்கும்போது உள்ள நிலை. நாம் உண்மையிலேயே இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறோமாம். ஆனால், வெளி உலகத்திற்கு நாம் மூன்றாவது