உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

தொழில்துறை பற்றி

9-1-1998 அன்று கையெழுத்தாகியுள்ளது. இத்தொழில் பிரிவு, கடலூர் மாவட்டம் திரிச்சுவபுரம் கிராமத்தில் நிறுவப்பட்டு வருகிறது. முதற் கட்டத்திற்குத் தேவையான நிலத்தை வாங்கும் பணி, முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் ஏறத்தாழ 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்படுகின்ற ஒரு திட்டமாகும். இத்திட்டத்திற்குத் தேவையான கட்டட வேலை, வரும் ஜூன் மாதம் தொடங்கும்.

உயர்தர தொழில்நுட்பத் தொழில் பூங்கா - Hi-Tech Technology Industrial Park (TNFAC) மற்றும் Axes Technologies ஆ ஆகிய அமெரிக்க நிறுவனங்களோடு, 'டிட்கோ' இணைந்து, தனியார் ஏற்றுமதி வளாகப் பூங்கா ஒன்றை, நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் நிறுவி வருகிறது. 800 கோடி ரூபாய் முதலீட்டில் இப்பூங்காவிற்குத் தேவையான நிலம், அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும். இப்பூங்காவில் அமையவிருக்கும் தொழில் நிறுவனங்களின் மொத்த முதலீடு, சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய். இத்திட்டத்தின் தொழில் முனைவோருக்கான ஒப்பந்தம் 24-2-1998 அன்று கையெழுத்தாகியுள்ளது. சுமார் 2,500 ஏக்கர் நிலம், ஜூன் மாதத்தில், ஆர்ஜிதம் செய்வது முடிவடையும். 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்

ஆட்டோ உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் Mahindra Industries Park Limited தொழில் வளாம். இத்தொழில் வளாகத்தை 'Mahindra Reality and Infrastructural Development Limited' T 60TM நிறுவனம் மற்றும் ILFS நிறுவனம் ஆகியோருடன் இணைந்து உருவாக்க, 'டிட்கோ' நிறுவனம், 12-6-1997 அன்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது

இத்தொழில் வளாகம். சென்னையை அடுத்த மறைமலை நகரில் 1,200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இத்தொழில் வளாகத்தில், மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப் படவுள்ளன. 3,000 பேருக்கு நேரடியாகவும், 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். நடப்பாண்டு இறுதியில், இவ்வளாகத்தின் பணிகள் முடிவடையும்.