உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

தொழில்துறை பற்றி

PVC foamed sheets -செயற்கை மரப்பொருள் திட்டம். இத்திட்டம் இத்தாலியைச் சேர்ந்த வினோத் சகாய் என்பவரால் இணைத் துறையிலே சுமார் 45 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமையவுள்ளது. இதற்கான தொழில் முனைவோர் ஒப்பந்தம் 25-2-1998-இல் கையெழுத்தானது. இத்திட்டத்திற்குத் தேவையான 6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. தேவையான இயந்திரங்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

Sriram Auto Components (Madras) Limited தொழிற்சாலை. 'டிட்கோ' சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் உறுப்பு நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களுக்குத் தேவையான நுட்பமான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைத்துள்ளது. இத்திட்டம் இணைத் துறையில் 21 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் 7-1-1998-இல் கையெழுத்தானது. 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிறுவனம் சோதனை உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது.

ரமண சேகர் ஸ்டீல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை. 19-6-1997 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்ட இத்தொழிற்சாலையை 'டிட்கோ' ரமண சேகர் அசோசியேட்ஸ் உடன் இணைந்து, இணைத் துறையில் அமைத்துள்ளது. இத்தொழிற்சாலை உருட்டுச் சுருள்களாக வரும் இரும்பினைத் தகடுகளாக மாற்றும். இது சென்னையை அடுத்த மணலியில் ரூ. 10 கோடியே 18 இலட்சம் முதலீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சோதனை உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வணிக உற்பத்தி ஜூன் மாதத்திலே தொடங்கப்படும்.

எஸ்.கே.எம். முட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை. ஈரோட்டில் 100 சதவிகிதம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட முட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை 40 கோடி ரூபாய் செலவில் 12-2-1997 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்தொழிற் சாலையில் நாள்தோறும் 10 இலட்சம் முட்டைகளிலிருந்து albumen powder. yolk powder ஆகியவை தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இவை எல்லாம், அறிவிக்கப்பட்டவை எத்தனை, நடப்பவை எத்தனை என்ற கேள்விக்கு விளக்கமான பதில்கள்