உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

தொழில்துறை பற்றி

பணிபுரிவார்கள். இதன்மூலம் கணிசமான அன்னியச் செலாவணி ஈட்டப்படும். மற்றும் மென்பொருள் துறையில் நாட்டில் சென்னை ஒரு முன்னோடியான இடத்தை அடைய முடியும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

சென்னையை அடுத்து, கோவை மாநகரிலும் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களையும் கிளைகளையும் நிறுவி வருகின்றன. இவற்றின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு எல்காட் நிறுவனமும், சிப்காட் நிறுவனமும் இணைந்து கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள 6 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நவீன மென்பொருள் பூங்கா ஒன்றை நிறுவி வருகின்றன. சுமார் 50 கோடி ரூபாய் செலவில், 2.5 இலட்சம் சதுர அடி கட்டட அளவில் அமையவிருக்கும் இப்பூங்காவின் கட்டுமானப் பணி அடுத்த மாதம் தொடங்கி 12 மாதங்களில் முடிவுறும். இப்பூங்காவில் ஏறத்தாழ 2,500 மென்பொருள் தொழில் வல்லுநர்கள் பணிபுரிவார்கள் என்ற அறிவிப்பையும் இங்கே நான் செய்கிறேன்.

கடைசியாக, உறுப்பினர் திரு. ரங்கநாதன் தொடங்கிய விஷயம். தொடங்கியதோடு முடிக்கின்றேன். 'Single Window System' தொழில் துறையை வளர்ப்பதற்கும், மேலும் முன்னேறுவதற்கும் தேவை என்ற அரிய கருத்தை அவர் சொன்னார். பிற மாநிலங்களில், நம்முடைய அண்டை மாநிலங்களில் எல்லாம் அந்த 'Single Window System' இப்போது கடைப்பிடிக்கப்படுகின்றது. இதிலே முக்கியமாக தொடங்கிய பெரிய தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், உதாரணமாக யூண்டாய், செயிண்ட் கோபைன், மிட்சுபிக்ஷி போன்றவைகளில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளைப் பரிசீலிக்க தொழில் துறைச் செயலாளர் தலைமையில் ஒவ்வொரு திங்களும் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட தொழில் முதலீட்டார்களும் சந்தித்து Pending issues பற்றிப் பரிசீலித்துப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்துக் கொள்கிறார்கள். மேலும் புதிதாகத் தொழில் தொடங்க வருபவர்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்கத்தக்க வகையில் 100 கோடி ரூபாய்க்குமேல் ஒரு தொழிற்சாலைக்கு முதலீடு செய்து